கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பலவித குழப்பத்துடன் இருப்பது வழக்கம்.
அதுவும் இயற்கையாக மனதளவில் குழப்பம் இல்லா விட்டாலும், அவரவர் தன் கருத்துக்களை பதிவு செய்கிறேன் எனும் பெயரில் கர்ப்பிணி பெண்கள் மனதை குழப்பமாக வைத்திருக்க முயல்வதுண்டு.
அப்படி இருக்க இன்னும் ஒரு மாதத்தில் நான் என் குழந்தையை ஈன்று விடுவேன் என யோசிக்கும் பெண்ணவள், என்ன உண்ண வேண்டு மென்பதையும் கவனமாக கையாள ஆசைப்படுகிறாள்.
கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
எந்த உணவை எல்லாம் சாப்பிடலாம்?
தானியங்கள் அடங்கிய ப்ரெட்:
இந்த தானியங்களில் போலிக் அமிலம் அடங்கி யிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல...
இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கிறது.
எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
பழங்கள்:
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு.
இந்த பழங்கள் எல்லா வித ஊட்ட சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது.
அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
காய்கறிகள்:
பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
9 -ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும்.
இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.
பால் உற்பத்தி உணவுகள்:
சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது.
கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்ற வற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
புரதம் அதிகம் அடங்கிய உணவு:
இந்த புரதம் அடங்கிய உணவுகளில் அமினோ அமிலம் நிறைந்திருக்க உடல் செல் கட்டமைப்பு பணிக்கும் பெரிதும் உதவுகிறது.
ஆனால், புரத உணவை நீங்கள் கர்ப்ப காலத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது மூன்று மாதத்தில் எடுத்து கொள்ளும் போது மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
நீங்கள் உண்ணும் உணவை பொறுத்தே குழந்தையின் வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்தில் அமைகிறது.
நீர்ச்சத்து:
கர்ப்பிணி பெண்கள் மிகவும் முக்கியத்துவம் தரவேண்டிய விஷயங்களுள் ஒன்று தண்ணீர்.
ஆம், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தண்ணீர் தேவைப்பட,
இதனால் கருவை சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்து கொள்ளவும் செய்கிறது.
உங்களுடைய 9ஆவது மாதத்தில் நீங்கள் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
இப்படி கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்பது ஒவ்வொரு 3 மாதத்திலும் வேறுபட, எவற்றை நீங்கள் உண்ண வேண்டும்? உண்ணக்கூடாது? என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் மீது பல வித கேள்விகள் எழ வேண்டும்.
அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது உங்களுக்கு கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.