பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்று போக்கு !

Fakrudeen Ali Ahamed
0
கடைவாய் பற்கள் வரும் சமயத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. பல் முளைக்கும் போது ஏற்படும் நமைச்சல் மற்றும் குறு குறுப்பால் 
 பல் முளைக்கும் போது
குழந்தைகள் எதையாவது எடுத்து வாயில் வைத்து விடுவதினால் தான் அந்த நேரத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மற்றபடி பல் முளைப்பதற்கும் வயிற்றுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1. ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைக்கு மேல் வயிற்றுபோக்கு போனாலோ, அல்லது
2. காய்ச்சலுடன் வயிற்றுபோக்கு போனாலோ அல்லது

3. வயிற்றுபோக்குடன் வாந்தியும் சேர்ந்து இருந்தாலோ

உடனடியாக மருத்துவரை அனுகிவிடுங்கள். பல் முளைக்கும்போது வரும் வயிறுபோக்குதானே என்று பேசாமல் இருந்துவிடாதீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)