பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு எடை குறையுமா?

Fakrudeen Ali Ahamed
0
பொதுவாக குழந்தைகளுக்கு நான்காம் மாதத்தில் இருந்தே பல் முளைக்க தொடங்கி விடும். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பல் முளைக்கும் செயல்முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
குழந்தைகளுக்கு எடை குறையுமா?
ஒவ்வொரு பல் முளைக்கும் போதும் உங்கள் குழந்தை பல்வேறு அறிகுறிகளை சந்திக்கும். அதில் முக்கியமான ஒரு அறிகுறி பசியின்மை.

ஒவ்வொரு பல் முளைக்கும் போதும் குழந்தைக்கு பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடை குறைப்பு ஏற்படும். பசியின்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பல் முளைக்கும் போது குழந்தைக்கு ஏற்படும்

அசௌகரியம் அல்லது வலியே. பல் முளைக்கும் போது ஈறுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் அதனால் உண்டாகும் வலி ஆகிய காரணத்தினால் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும்.

ஈறுகளுக்கு எதிராக பற்கள் தள்ளிக்கொண்டே வெளியே வரும் போது ஏற்படும் அழுத்தத்தினால் குழந்தைகளுக்கு பசியின்மை ஏற்படும். பல் வெளிவருவதற்கு 4 நாட்களுக்கு முன்பே இந்த வலியும் அசௌகரியமும் ஏற்படும்.

பல் முளைக்கும் போது, குழந்தைகளுக்கு எரிச்சல் ஏற்படுவது இயல்பே. வலியினால் அவர்களால் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. 

இதனால் நீர்ப்போக்கு ஏற்படும். அதனால் முடிந்த வரையிலான நீர் பானங்களை கொடுங்கள். இதனால் அவர்கள் நீரேற்றத்துடன் இருப்பார்கள்.
நீர்ப்போக்கு ஏற்படும் போது அதற்கான சிறந்த தீர்வாக விளங்குவது பீடியாட்ரிக் எலக்ட்ரோலைட் தீர்வுகள். இதனால் சோடியம் அளவு அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகரிக்கும்.

பல் முளைப்பதால் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து உதவ குளிர்ந்த தயிர் அல்லது பழங்களை பயன்படுத்துங்கள். குழந்தைக்கு கொடுக்கும் முன் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து, 

அதன் பின் கொடுக்கவும். இதமாக இருக்கும் குளிர்ந்த உணவை குழந்தைகள் விரும்புவார்கள். அவர்கள் சுலபமாக மெல்லக்கூடிய மென்மையான உணவுகளை கொடுங்கள். 

உணவை கொடுப்பதற்கு முன் குழந்தைகளுக்கு ரப்பர் டீத்திங் அல்லது துவைத்த துணியை கொடுத்து கடிக்க வையுங்கள். இதனால் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)