குழந்தைகளை செல்போனுக்கு அடிமை ஆக்காதீர்கள் !

Fakrudeen Ali Ahamed
0
குழந்தைகள் வீட்டுக் குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும் போது உடல் பெறும் அவசியமான வைட்டமின் கள் எதுவுமே குழந்தை களுக்கு கிடைப்ப தில்லை.
குழந்தைகளை அடிமை ஆக்காதீர்கள் !
இன்றைய குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடு கிறார்கள். பெற்றோர் களும் அதனை ஊக்கு விக்கிறார்கள். ஆனால் மருத்துவத் துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது.

தற்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர் களிடமும், பிசியோதெரபி மையங் களுக்கும் வரும் பெற்றோர் களின் எண்ணிக்கை அதிகரித்தி ருக்கிறது.

பல மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்த படி செல்போன், டேப்லட் போன்ற வற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளை யாடுவது போன்ற வற்றால் முதுகு எலும்பு, தசைகள் பாதிப் படைகின்றன.

மன நிம்மதி, தூக்கம் என எல்லா வற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பையும் தருகிறது.

சும்மா உட்கார்ந்த படி தொடு திரையை விரல்களால் தேய்த்துக் கொண்டி ருக்கும் பழக்கம் விரல் களுக்கோ, கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவ தில்லை.
உட‌ல் பருமன் என்ற பாதிப்பு
அதனால் அவை திடமான வளர்ச்சி பெறுவ தில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள்.

குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும் போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தை களுக்கு கிடைப்ப தில்லை.

அதோடு உடலை வருத்தி எந்த விளை யாட்டிலும் ஈடுபடாத தால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும், உயர் ரத்த அழுத்தத் திலும் கொண்டு வந்து விடுகிறது.

ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு உள்ளா கின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத் திறன் பாதிக்கப் படுகிறது.

மிக இளம் வயதிலேயே கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. பொதுவாக பெற்றோர் களும், மற்றோர்களும் பேசிப்பேசி தான் குழந்தைகளின் பேச்சுத் திறனும், மூளைத் திறனும் வளர்ச்சி பெறுகின்றன.

விழிகள் உலர்ந்து போவது

கருவிகளின் திரைகளில் தோன்றும் மாயக் காட்சிகள் குழந்தை களை வெறும் பார்வை யாளர்களாக ஆக்கி விடுகின்றன.

இப்படி மொபைல் களுக்கு அடிமையாகும் குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவ தில்லை. கேட்கும் கேள்வி களுக்கு உடனே வார்த்தை களை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை.

மற்றவர் களோடு பழகவோ, பிற குழந்தை களோடு இணைந்து விளை யாடவோ தெரியாமல் தனிமைப் பட்டு விடுகின்றனர். இது குழந்தை களின் எதிர் காலத்தை பாதிக்கும்.

உங்கள் குழந்தைகள் மொபைல், கம்ப்யூட்டர் போன்ற வற்றிற்கு அடிமை ஆகி உள்ளார்களா என்பதை சில அறி குறிகள் மூலம் கண்டு பிடிக்கலாம்.

செல்போனோ, டேப்லட்டோ இல்லாத விளையாட் டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழக மாட்டார்கள்.
யார் முகத்தையும் பார்த்து பேசுவது இல்லை
பக்கத்து வீட்டுக் குழந்தை யுடன் நட்பாக இருக்க மாட்டார்கள்.

உரிய வயது வந்தபிறகும் சரளமாக பேச வராது. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள்.

உங்களோடு பேச மாட்டார்கள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தை களிடம் செல்போன் உள்பட எந்த திரையுள்ள கருவி களையும் தராதீர்கள்.

ஒருவர் ஒரு நாளில் டி.வி. உள்பட எல்லா திரையுள்ள கருவி களையும் 2 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும்.

அதற்கு மேல் பார்க்கக் கூடாது என்கிறது சமீபத்திய ஆய்வு. அதேபோல் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அவர் களுக்கு பரிசாக எந்தவொரு திரையுள்ள கருவி களையும் வாங்கித் தராதீர்கள்,

இது உங்கள் குழந்தை களை மனவலிமை அற்றவர் களாக மாற்றிவிடும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)