மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதம் பயன்படுத்தலாம் !

Fakrudeen Ali Ahamed
0
கண்ணாடி அணிகிறவர்கள் வருடத்துக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். 
மூக்குக் கண்ணாடியை பயன்படுத்தும் காலம்
இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அது தான் பார்வைக் குறைபாடு என்கிறோம். 

18 வயது வரை நாம் வளர்கிற காலம் என்பதால் கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு. 
18 வயதுக்குட் பட்டவர்கள் வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்ற வாறு கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும்.

18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பவர் பெரும்பாலும் மாறாது. இரண்டு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும். 
18 வயது வரை கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்கும்
இடையில் பார்வை மங்கலாவது போல் தெரிந்தாலோ வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ கண்களி லிருந்து தண்ணீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும். 

கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றி விடுவது நல்லது.
சிக்கனுடன் எலுமிச்சை.. எதற்காக தெரியுமா?
40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்சனை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்சனைகளும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற 

மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)