குழந்தையின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிவது !

Fakrudeen Ali Ahamed
0
பிறந்த 4 மாதத்துக் குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் (Parents need to diagnose and treat hearing loss in children) என பால வித்யாலய பேச்சுப் பயிற்சி பள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் செவித்திறன் குறைபாடு
சென்னை யில் குழந்தை களின் செவித்தி றனை கண்டறி வதற்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி, பால வித்யாலய பேச்சு பயிற்சி பள்ளியில் புதன் கிழமை நடை பெற்றது.

இதில், பள்ளியின் கௌரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, துணை முதல்வர் டாக்டர் மீரா சுரேஷ்,

பேச்சு பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் குழந்தை களின் செவித்தி றனைக் கண்டறி வற்கான முறை களை விளக்கினர்.

இது குறித்து சரஸ்வதி நாராய ணசாமி கூறிய தாவது:

பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு செவித் திறன் குறைபாடு உள்ளது (One in a thousand babies are born deaf.). 
 
பெற்றோர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இந்தக் குறை பாட்டை கண்டறிவதில்லை (Parents do not detect this defect at an early stage.). 
குழந்தையின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிவது !
குழந்தை களிடம் பெற்றோர் கள் தொடர்ந்து பேசிக் கொண்டி ருக்க வேண்டும் (Parents need to keep talking to their children.).

இதன் மூலம், பேச்சு சப்தம் வரும் திசை, நபர்கள், அதன் அர்த்தம் ஆகிய வற்றை குழந்தை கள் புரிந்து கொள்ள முற்படுவர்.

குழந்தைகளின் அசைவுகள், கேட்கும் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, இவற்றில் குறைபாடு இருப்பின் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதிக்க வேண்டும். 

அதே போல் (As well as or Similarly), குழந்தைகளை உறவினர் களுடனும், சக குழந்தைகளுடனும் இயற்கை சூழ்நிலையில் விளையாடவோ, பேசவோ பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். 
 
இதன் மூலம் (from this), குழந்தைகளின் பார்வை, கேட்கும், பேசும் திறன்கள் மேம்படும்.
குழந்தையின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிவது !
இந்தப் பள்ளியில் குறைபாடுடைய 95 குழந்தைகளுக்கு செவித் திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப் பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட வயதுக்குள் பயிற்சிப் பெற்று, செவித் திறன் குறைபாடு குணப்படுத்தப் பட்டு அவர்கள் பள்ளியில் பயில செல்கின்றனர்.

ஆனால், குறைபா டுடைய குழந்தை களை 3-4 வயதுக்கு பிறகே பெற்றோர்கள் இந்த பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். 
 
அந்த வயதில் செவித்திறன் குணப்படுத்துவது கடினம் (Hearing loss is difficult to cure at that age.).

எனவே, பிறந்த 3-4 மாதங்க ளுக்குள் குழந்தை களின் செவித் திறனைக் கண்ட றிந்து, குறைபாடிருப்பின் இது போன்ற செவித்திறன் பயிற்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)