குழந்தைகள் கோபப்பட்டால் என்ன செய்ய?

Fakrudeen Ali Ahamed
0
குழந்தைகள் கோபப்பட்டு அடம் பிடிப்பது, பொருட்களை எறிந்து சண்டித்தனம் செய்வது, அடிக்க வருவது, கடிப்பது, அமைதியாக அழுவது, தொடர்ந்து இதே போல் தொல்லைகள் தருவதை அறிந்தால் அவர்களுக்கு நடத்தை மாற்ற பயிற்சி அவசியமாகும்.
குழந்தைகள் கோபப்பட்டால்

அப்போது பெற்றோர் இதை கடைப்பிடிக்க வேண்டும். கோபத்திற்கான காரணத்தை கண்டு பிடியுங்கள். தேவை நிராகரிக்கப் பட்டதால் அழுதால் குழந்தையின் தேவையை நிறை வேற்றுங்கள்.
அது தேவையற்ற அடம் பிடித்தல் என தெரிந்தால், அதை நிராகரிப்ப தற்கான காரணங்களை விளக்குங்கள்.

அடிக்கடி கோபப் பட்டால் குழந்தையின் தேவைகள், எதிர் பார்ப்புகள் மீது கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எது சரி, எது தவறு? என்பதை புரிய வையுங்கள்.

பிடிவாத கோபத்தை சில நேரங்களில் புறக்கணித்தல் மூலம் தான் சரி செய்ய முடியும். எல்லா நேரங்களிலும் புறக்கணிக்காமல் அவசியமானதை புறக்கணித்து, தேவை யானதைத் தான் பெற்றோர் செய்வார்கள் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்குங்கள்.
உங்கள் குழந்தையை தவழ விடுங்கள் ! 
 உங்களால் கையாள முடியாத அளவில் அவர்களின் செயல்பாடுகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)