கூந்தலுக்கான டிப்ஸ்... !

Fakrudeen Ali Ahamed
0
பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். சரியான முறையில் தேய்க்க வில்லை எனில், எளிதில் முடி உடைந்து விடக்கூடும். 
கூந்தலுக்கான டிப்ஸ்

தலைக்குக் குளித்ததும் துவட்டாமல் ஈரத் தலையுடன் இருப்பது முடிக்கான பாதிப்பை அதிகரிக்கும். துவட்டி, நன்றாகக் காய வைப்பதே முடிக்கான பாதுகாப்பு. 

இரவு படுக்கைக்குப் போகும் போது, எண்ணெய் தடவி, தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாக பின்னல் போட்டுக் கொள்வது, முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். 
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சீயக்காய் போட்டு அலசினால், முடி நன்றாக வளரும். 

தலையில் சீப்புப் போட்டு வாரும் போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால், முன் நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்தி டுவதுடன், பருக்கள் போல் பொரிப் பொரியாக வரவும் வாய்ப்புகள் அதிகம். 
தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால், முன் நெற்றி பகுதி பெரிதாகக் கூடும். தழைத்து வாருவது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)