கூந்தலை ஆரோக்கியமாக்கும் உணவுகள் !

Fakrudeen Ali Ahamed
0
நிறைய கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது. அதிலும் தினம் ஒரு கீரை எனப் பட்டியல் போட்டு சாப்பிடும் போது, இரும்புச்சத்து கிடைத்து, முடி உதிர்தல், வழுக்கை என எதிலும் பாதிப்பு இல்லாமல், செழிப்பாக இருக்கும்.
கூந்தலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்

அத்திப்பழம், பேரீச்சை, நட்ஸ் வகைகள், காய்கறி, பழங்கள் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு பலம் தரும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் முடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

கால்சியம் சத்து, எள் மற்றும் பாலில் அதிகம் இருக்கிறது. எள்ளை லேசாக வறுத்து, வெல்லம் சேர்த்து உருண்டை யாகப் பிடித்து, குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துப் பழக்கலாம்.
கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து, சமையலுக்குப் பயன்படுத்தலாம். சாதத்துடன் பிசைந்து நெய் சேர்த்தும் தரலாம்.  கறிவேப்பிலையில் புரதமும், இரும்புச் சத்தும் மிக அதிகம்.

மேலும் இதில் உள்ள பீட்டாக் கரோட்டின் செல்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதால் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். பேரீச்சை, கறிவேப்பிலை, கீரை போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் முடி வளர்ச்சிக்கு நல்லது.

வைட்டமின் இ அடங்கிய சோயாபீன்ஸ், சீஸ், பழங்கள் ஆகியவற்றை சாப்பாட்டில் சேர்த்து கொள்வது முடி உதிர்வதைத் தடுக்கும்.
சோயாபீன்ஸ், சீஸ், பழங்கள்
புரதச் சத்துள்ள பால், முட்டை, மீன் போன்ற உணவுகள் வைட்டமின் பி நிறைந்த தேங்காய், பால், தக்காளி, ஆரஞ்சு, முளைக் கட்டிய கோதுமை, ஓட்ஸ், பாதாம், வேர்க்கடலை போன்ற வற்றைச் சாப்பிடுவதன் மூலமும் கூந்தலை மிளிரச் செய்யலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்: 

வைட்டமின் (அ) பயோடின்: 

செல்களை உற்பத்தி செய்யும். செல்களைப் புதுபிக்கும். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும்.
உணவுகள்: 

முட்டை, ஈஸ்ட், காலி ஃப்ளவர், ராஸ்பெர்ரி, வாழை, வால்நட், பாதாம்.
வால்நட்
வைட்டமின் பி :  

டெஸ்டோஸ்டீரான் செயல்பாட்டை சமன்படுத்தும். இதனால் ஏற்படும் தடைகளையும் மாற்றும் வல்லமை வைட்டமின் பி6க்கு உள்ளது.

உணவுகள்: 

ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகள்.

வைட்டமின் ஏ: 

கூந்தல் கருப்பாகவும், பளபளப்பாகவும் வளர உதவும். கூந்தலை வலுப்படுத்தி அடர்த்தியாக்கும்.

உணவுகள்: 

உருளை, கேரட், ஈரல், முட்டை, பால், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம்.

வைட்டமின் பி12: 
கூந்தல் உதிர்வதைத் தடுக்கும். உடலில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.

உணவுகள்: 

முட்டை, சீஸ், பால், யோகர்ட்.

வைட்டமின் சி: 
>வைட்டமின் சி:

முடி வளர்ச்சிக்கு உதவும். இளநரையைப் போக்கும். வறட்சியை நீக்கும்.

உணவுகள்: 

எலுமிச்சை, கொய்யா, ஸ்டாரபெர்ரி.

வைட்டமின் இ: 

ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் அனைத்துக் கூந்தல் பிரச்னைகளும் தீரும்.

உணவுகள்: 

பாதாம், மீன், பால், வேர்க்கடலை, கீரைகள், சூரியகாந்தி விதைகள், உலர் மூலிகைகள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)