திருமணம்"- ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலை மிக முக்கியமான தாக கருதப் படுகிறது. இது ஒவ்வொரு நாட்டு மக்களின் கலாசாரத்திற்கு ஏற்ப மாறுபடும். சிலருக்கு இது மிக முக்கியமான உறவாக இருக்க கூடும்.
சிலர் இதை சாதாரண உறவாக எடுத்து செல்வார்கள். எப்படி இருந்தாலும் மனதளவிலும், உடளவிலும் பல வகையான மாற்றங்களை இந்த திருமணம் ஏற்படுத்தும்.
குறிப்பாக ஆண்களின் உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை இந்த திருமணம் ஏற்படுத்தும் என்பதை நாம் அவ்வளவும் பேசுவதில்லை. பெண்ணின் உடலில் ஏற்பட கூடிய மாற்றத்தை பற்றி பெரும்பாலும் நாம் தெரிந்து வைத்திருப்போம்.
ஆனால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆகிய பின் என்ன விதமான மாற்றங்கள் அவர்களின் உடலில் ஏற்படும் என்பதை நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அப்போது தான், இது உங்களின் இல்லற வாழ்விலும், தாம்பத்திய வாழ்விலும் நல்ல முறையான தாக்கத்தை தரும்.
கல்யாணத்திற்கு முன்
பொதுவாக ஆண்கள் கல்யாணத்திற்கு முன் ரொம்பாவே ஜாலியாக இருப்பார்கள். எதை பற்றியும் அதிகமாக கவலை கொள்ள மாட்டார்கள்.
இருப்பினும் பொறுப்பையும் மறக்க மாட்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டுமென்றால், உங்களின் மீது புரிதல் அதிகம் கொண்ட பெண்ணை தேர்வு செய்தல் நல்லது.
உடல் எடை போட்டுடுவீங்க..!
திருமணத்திற்கு பிறகு பல ஆண்களின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட கூடும். குறிப்பாக ஆண்களின் எடை சற்று அதிகமாக கூடும்.
இதற்கு காரணம் அவர்களின் உணவு பழக்கமும், கல்யாணத்திற்கு பிறகு ஏற்படுகின்ற சோம்பலான உடல் நிலையும் தான்.
ஹார்மோன் மாற்றங்கள்
ஆண்களின் உடலில் திருமணம் ஆகிய பிறகு ஹார்மோன் மாற்றங்கள் அதிகரிக்க கூடும். இதற்கு காரணம் தங்கள் இணையுடன் உடலுறவு வைத்து கொள்வது தான்.
இது நல்ல மாற்றத்தை தான் ஆண்களின் உடலில் ஏற்படுத்த கூடும். அத்துடன் உடலில் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.
மன அழுத்தம் குறையும்
இன்று பலருக்கும் இருக்க கூடிய மோசமான பிரச்சினையாக கருதப்படுகின்ற மன அழுத்தத்தை குறைக்க ஒரு எளிய வழியை தருகிறது திருமணம்.
அதுவும் ஆண்களுக்கு இது சாதகமாகவே உள்ளது என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாம்பத்திய வாழ்க்கை
பல ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பலவித மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. இதனால் ஆண்களின் பிறப்புறுப்பில் வர கூடிய புற்றுநோய் கூட தடுக்கப் படுகிறது.
உடல் உறுப்புகளின் ரத்த ஓட்டம் சீரக இருக்கவும், மன நிலை ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவுகிறது.
எதிர்ப்பு சக்தி
திருமணத்திற்கு பின் ஆண்களுக்கு எதிர்ப்பு சக்தி மேலும் கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை கலவி கொள்வது தான்.
ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி மேலும் உயரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளைக்கு வேலை...
காதலில் மூழ்கிய இருவரும் திருமணம் என்னும் பந்தத்திற்குள் நுழைந்த பிறகு மூளையின் செயல்பாடுகளும் மாற தொடங்கும்.
உறவில் சேரும் போது ஆக்சிடோஸ்சின் என்கிற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து மூளையின் செயல்திறனை அதிகரிக்க கூடும். மேலும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தயக்கத்தை போக்கும்
திருமண பந்தத்திற்கு பிறகு பல ஆண்களுக்கு முன்பிருந்த தயக்கம், தடுமாற்றம், பயம் நீங்கும். வாழ்க்கையில் எதோ ஒரு பிடிப்பு கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த உணர்வு அதிக தன்னம் பிக்கையை தரவல்லது. எதையும் சமாளிக்கும் திறனும், மன பக்குவமும் அதிகரிக்க கூடும்.
நேர்மறை எண்ணங்கள்
ஆண்களின் உடலில் பெரும்பாலும் இந்த மாற்றம் ஏற்பட கூடும். உளவியல் ரீதியான மாற்றத்தை திருமணம் தரவல்லது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இருவருக்கான புரிதல் அதிகமாக இருந்தால் கட்டாயம் உளவியல் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
உடற்பயிற்சி குறையும்
ஆண்களுக்கு திருமணம் ஆகிய பின் உடலில் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். திருமணத்திற்கு பிறகு ஆண்கள் உடற்பயிற்சி செய்வதை பெரிதும் குறைத்து விடுகின்றனர்.
இதனால் அவர்களின் உடல் நிலை மாற்றம் அடைகிறது. கொழுப்பு கூடுதல், உடல் பருமன் கூடுதல், வயதான உணர்வும் கூட சிலருக்கு ஏற்பட கூடும்.
வேண்டாமே..!
திருமணத்திற்கு முன் பல ஆண்கள் புகை பழக்கம், மது பழக்கம் போன்ற வற்றை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஆனால், இது பலருக்கு அப்படியே தலைகீழாக மாற கூடும்.
திருமணத்திற்கு பின் ஆண்கள் இது போன்ற பழக்கத்தை குறைத்து கொள்வார்களாம். இது மனம் மற்றும் உடல் சார்ந்த பல நன்மைகளை தரும்.