லி‌ப்‌ஸ்டி‌க் ப‌ற்‌றிய ச‌ந்தேக‌ங்க‌ள் தெரிந்து கொள்ள !

Fakrudeen Ali Ahamed
0
லாங் லா‌ஸ்ட்டிங் ‌லி‌ப்‌ஸ்டி‌க் குக‌ள் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்து விடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும்.

இதனை‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் போது உதடுகள் உலர்ந்து விட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்‌ஸ்டிக் குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும்.
பளபளப்பு தேவை யென்றால் இதன் மேல் லிப் கிளா‌ஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்து விடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. 

‌லிப் பென்ஸில் உதடுகளை மேலும் அழகாக்குகிறது. லிப்‌ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்‌ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம்.

லிப் பென்ஸிலால் தடவுவதால் லிப்‌ஸ்டிக் உதடுகளை விட்டு வெளியே பரவாமல் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)