உயரம் குறைவான பெண்ணுக்கு குறைப் பிரசவமா?

Fakrudeen Ali Ahamed
0
தாய் உயரம் குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் உயரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் நீண்ட காலமாகவே பலரது மனதில் இருந்து வருவது. 
பெண்ணுக்கு குறைப் பிரசவமா?
ஆனால், இதற்கு எதிர் மாறாக குழந்தைகள் உயரமாக வளர்வதும் நாம் நிஜத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், கரு வுற்றிருக்கும் பெண் உயரம் குறைவாக இருப்பது, 
 
குழந்தை நலனுக்கும், பிரசவத்தின் போதும் கூட பிரச்சனையாக இருக்குமா என்பது குறித்து நடத்தப்பட்டு, ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது....

3,500 தாய் மார்கள் மற்றும் குழந்தைகள்
PLoS என்ற இதழில் வெளிவந்த இந்த ஆய்வில் 3,500 தாய் மார்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கெடுத்துக் கொண்டனர்.

குறைப் பிரசவம்

உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு தான் நிறைய குறைப் ிரசவம் ஏற்படுவதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். 
உயரம் குறைவான பெண்
மற்றும் குழந்தைகளும் மிகவும் சிறியதாக முழு வளர்ச்சி இன்றி பிறப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. 
 
மரபணு தான் காரணம்

உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படுவது அல்லது பிறக்கும் குழந்தை முழு வளர்ச்சியின்றி பிறப்பதற்கு 
 
அவர்களது மரபணு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது என்று இந்த ஆய்வை நடத்தி யவர்களில் ஒருவரான மருத்துவர் லூயிஸ் கூறியுள்ளார். மற்றும் இது வியப் பாக இருப்ப தாகவும் அவர் கூறி யிருக் கிறார்.
ஆரோக்கியம்

தாயின் மரபணு மட்டுமின்றி, பிரசவ காலத்தில் அவர் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன் போன்றவையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. 
ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்
தாயின் ஊட்டச் சத்துக்கள் காரணமாக தான் ஓர் குழந்தை நல்ல நலத்துடன் வளர்கிறது. எனவே, இதை உணர்து தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

சுற்று சூழல்

ஓர் தாய் கருவில் குழந்தையை எவ்வளவு தாங்க முடியும், சுமக்க முடியும் என்பதை, அவரது உயரத்தை விட,ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுசூழல் எல்லாம் தான் முக்கிய காரணியாக இருக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)