நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத் தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டு செல்கிறது.
அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்க ளாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறியுள்ளது.
18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடை பிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது.
அது தான் மாத விடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம்.
இந்த வழக்கம் சஹௌபாடி என்று அழைக்கப் படுகிறது.
பெண்களின் மாத விடாயை குறிக்கும் இந்த சொல், அத்தகைய காலத்தில் இவர் சுத்த மற்றவர் என்ற பொருளையும் தருகிறது.
ஈஸ்வரி ஜோசிக் 15 வயதான போது தான் முதல் முறையாக மாதவிடாய் வந்தது. அப்போது 9 நாட்கள் வீட்டுக்கு வெளியே தங்கியதாக அவர் தெரிவி க்கிறார்.
வீட்டுக்கு வெளியே தூங்க வேண்டும்
ஈஸ்வரி வாழும் தாமிலெக் கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இரு ஆறுகளால் தாழ்வான, பசுமையான பள்ளதாக் காக காணப்படுகிறது.
ஏறக்குறை 100 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. மண்ணால் பூசப்பட்ட மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் இந்த மக்கள் வாழ்கின்றனர்.
தரை தளத்தில் கால் நடைகள் அடைக்கப் படுகின்றன.
குடும்பத்தினர் நடுத்தளத்தில் தங்க, மேல்தளம் சமைய லுக்கு பயன்படுத்தப் படுகிறது.
இங்குள்ள பெண்கள், தங்களின் மாத விடாய் காலத்தின் போது, வீட்டை விட்டு வெளியேறி தனிப் பட்ட வகையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளில் தங்கியிருக்க வேண்டும்.
சரியான படுக்கை வசதி இல்லாமல் இருக்கின்ற இந்த சிறிய பகுதி பல குடும்பத் தினால் பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
அவ்வாறு தனியாக தங்கியிருக்கும் பெண்கள் சமைக்க முடியாது, ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிட முடியாது. கிராம நீர் ஆதரங்களில் இருந்து நீர் அருத்த மற்றும் குளிக்க கூடாது.
தாவரங்களை, கால் நடைகள் அல்லது ஆண்களை தொட கூடாது என்றும் தடை இருக்கிறது.
நாங்கள் பசுவை தொட்டு விட்டால், அவை பால் கொடுக்காது என்று கூறப் பட்டது என்கிறார் ஈஸ்வரி யின் தோழி நிர்மலா
இது போல நடந்ததை நாங்கள் பார்த்ததில்லை.
ஆனால் எங்களுடைய மூத்தோர் நாங்கள் பசுவை தொடக் கூடாது என்கின்றனர்
நான்கு நாட்கள் இந்த குடிசையில் தங்கி யிருந்த பின்னர், ஒரு மணி நேரம் நடந்து சென்று நீரூற்றில் நீராடுவர்.
பின்னர் லஷ்மிபசுவின் சிறுநீரால் சுத்தமாக்கப்படுவர்.
இவ்வளவுக்கும் பின்னர், தான் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
மாதவிடாய் காலத்தில் வெளியேற எதிர்ப்பு
இதற்கு எதிராக எழும் பெண்களும் இல்லாமல் இல்லை.
45 வயதாகும் கல்பனா ஜோசி மாதவிடாய் காலத்தில், தன்னுடைய கடைக்கு அடியில் இருக்கும், இந்த சஹௌ குடிசைக்கு செல்வ தில்லை.
அவ்வாறு செய்தால் விலங்குகள் மற்றும் குடிகார ஆண் களால் தாக்கப் படலாம் என்று அச்சமுறும் இளம் பெண் களுக்கு "அப்படி எதுவும் நடக்காது" என்கிறார் கல்பனா.
நான் அந்த இடத்திற்கு போக மாட்டேன். ஏன் போக வேண்டும்? நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லி விட்டேன் என்கிறார் 22 வயதான லஷ்மி. பெற்றோர் கோபப்பட்டனர்.
என்னுடைய சகோதரர்கள் புரிந்து கொண்டனர். நான் வீட்டில் இருப்பதை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்று லஷ்மி கூறுகிறார்.
ஆனால், திருமண மாகி கணவன் வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த நிலை நீடிக்குமா? என்பதில் லஷ்மிக்கே சற்று சந்தேகம் தான்.
அவர்கள் இப்படி தான் நடக்க வேண்டும் என்று சொன்னால், நான் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டியது தான் என்று அவர் கூறுகிறார்.
மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம்
தாமிலெக் கிராமத்திற்கு சாலை வசதி போடப்பட்டு, போக்கு வரத்து சீரான போது, மூட்டை தூக்கி வாழ்க்கையை கழித்து வந்தோர் வெளியூர், வெளி நாடுகள் சென்று செல்வம் ஈட்ட தொடங்கினர்.
எனவே, முந்தைய அதே பரப்பிலான விவசாயத்தை கவனித்து, அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் பெண்களையே சேர்ந்தது.
அத்தகைய நிலைமையிலும், ஆண்கள் சஹௌபாடியின் அவசியத்திலும், சக்தியிலும் நம்பிக்கை கொண்டு தான் இருக்கின்றனர்.
என்னுடைய மனைவி மாதவிடாய் காலத்தில் என்னை தொட்டால் நான் சுகவீனம் அடைந்து விடுவேன் என்று 74 வயதான ஷங்கர் ஜோசி கூறுகிறார். இளைஞரான யோக்யா ஜோசி, பாரம்பரியம் தொடர வேண்டும்.
ஆனால் வேறுபட்ட காரணத் திற்காக" என்கிறார். முற்காலத்தில், கடவுள்கள் கோபம் அடைவ தாக எண்ணி இந்த வழக்கம் பின்பற்றப் பட்டது" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், மாத விடாய் ரத்தத்தை தோய்த்து எடுக்க துண்டு துணி களையே கிராம பெண்கள் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி,
சுத்தமான சுற்றுச்சூழலை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும்,
வீட்டில் பாதுகாப்பு நிலவவுமே இந்த வழக்கம் என்றும் நம்புவதாக அவர் தெரிவிக் கிறார். மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம் என்று அவர் கூறுகிறார்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசுத்த மானவர்களா?
மாதவிடாய் காலம் பெண்கள் அசுத்தமாக இருக்கும் காலம் என்கிற கருத்து எப்படி தோன்றியது? என்று யாரும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
ஆனால், இந்துமத புனித நூற்களே பெரும்பாலும் காரண மாக கூறப்படுகிறது.
நாரணயள் பிரசாத் போக்ஹாரெல் போன்ற குருக்களின் வழிகாட்டுதல் களையும் மக்கள் பெறுகின்றனர். அவர் மாதவிடாய் புனிதமானது.
ஆனால் ஆபத்தா னதும் கூட என்கிறார். பெண் தன்னை கட்டுப் படுத்தி கொள்ளா விட்டால், அவருடைய உடலில் இருக்கும் அசுத்த ங்கள் உடலுறவின் போது ஆணுக்கும் பரவி கெடிய நோய்கள் ஏற்படலாம் என்று அவர் எச்சரிக் கிறார்.
தவறு தலாக ஒரு ஆண் மகனை தொட்டு விட்டதற்கும், சுற்றுச் சூழலை மாசு படுத்திய தற்கும் வருந்துகிற மத சடங்குகள் ஆண்டு தோறும் நடத்தப் படுகின்றன.
தவறு தலாக ஒரு ஆண் மகனை தொட்டு விட்டதற்கும், சுற்றுச் சூழலை மாசு படுத்திய தற்கும் வருந்துகிற மத சடங்குகள் ஆண்டு தோறும் நடத்தப் படுகின்றன.
ரிஷி பஞ்சமியின் போது, பெண்கள் உண்ணா நோன்பிருந்து, புனித நீரில் நீராடுகிறார்கள்.
சமூக வழக்கமாக...
மதத்தின் புனித நூற்களில் சஹௌபாடி அதன் வேர்களை கொண்டிருக்கலாம். ஆனால், பரவலாக கடை பிடிக்கப்படும் சமூக நடை முறையாக அது ஆகியிருக்கிறது.
மதத்தின் காரணமாக இந்த வழக்கத்தை பலர் கடை பிடிக்கின்றனர். பிறர், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள மக்கள் கடை பிடிப்பதால் கடைபிடிக்கின்றனர்.
அனைவரும் கடை பிடிப்பதால், பௌத்தர்கள் கூட இதனை கடை பிடிக்கும் வழக்கமும் உள்ளது என்கிறார் சிறப்பு இனப் பெருக்க சுகாதரா வளர்ச்சி பணியாளர் பிமா லாக்கி.
2005 ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றம் சஹௌபாடியை சட்டத்திற்கு புறம்பான வழக்க மாக அறிவித்தது. ஆனால் அந்த நாட்டின் தொலைதூர பகுதிகளில் மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடை பெறுகிறது.
நகர பெண்கள்
தாமிலெக் கிராம த்தின் செங்குத்து குன்று பக்கத்தில் இருந்து மக்கள் அதிகமாக வாழும் தலை நகரான காட்மண்டு வுக்கு நூற்றுக் கணக்கான மைல்கள் உள்ளன.
அங்கு குழந்தைகள் மாதவிடாய் பற்றி கற்று கொள்கின்றனர்.
சுகாதார பாதுகாப்பு பட்டையை எளிதாக வாங்கி கொள்ள முடிகிறது.
ஆனால், மாதவிடாய் பற்றிய எதிர் மறை கருத்துக்கள் இங்கும் முழுமை யாக அகன்று விட வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா இருவரும் 20 வயது களில் இருக்கின்ற பட்டதாரிகள்.
இந்த விதிகள் எனக்கு எந்த பொருளையும் தர வில்லை. எனது தாய் நான் தாவரங்களை குறிப்பாக பழங்கள் காய்க்கும் மரங்களை தொடக் கூடாது என்பார்.
நான் அவற்றை தொடர்ந்து தொட்டு வருகிறேன்.
அவை பட்டுவிட வில்லையே என்று நிர்மலா கூறுகிறார்.
ஆனால், திவ்யாவுக்கோ, மாதவிடாய் என்பது, மத பண்டிகையில் கலந்து கொள்வதை தடுப்பதாக பொருள்படுகிறது.
நாள் முழுவதும் வழி பாட்டிற்கு தயாரித்து கொண்டிருக்கையில், எனக்கு மாதவிடாய் என்று சொல்லி விட்டால் போதும்,
நான் தொடுகிற எல்லாவ ற்றையும் சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூறி விடுவர் என்று வருத்த த்தோடு கூறுகிறார் திவ்யா.
நேபாள சமூகம் மாறிக் கொண்டிரு க்கிறது. நிர்மலாவும், திவ்யாவும் சில கட்டுப் பாடுகளை சந்தித்தாலும், அவர்களின் தாய்மார் சந்தித்ததை விட இவை மிகவும் லேசானவை தான் எங்களுக்கு மாத விடாய் என்றால் இழிவாக பார்த்தார்கள்.
தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். தனி தட்டு, வேறுபட்ட ஆடைகள். யாரும் தொட மாட்டார்கள் என்று திவ்யாவின் தாய் சுதா ஆதங்கத்தை தெரிவிக் கிறார்.
சுதா, திவ்யாவை பெற்றெடுத்த போது, தான் அனுபவித்த கொடுமையை தன்னுடைய மகள் அனுபவிக்க கூடாது என்று பெரிய அளவில் கட்டுப் பாடுகள் இல்லா மல் வளர்த்தார்.
அதுவே தன்னுடைய தன்னம் பிக்கையை வளர்த்தாக தெரிவிக் கிறார் திவ்யா.
திவ்யாவை போல மாதவிடாய் பற்றிய எதிர் மறை கருத்துக் களை ஊட்டி வளர்க்கப் படாத பல பெண்கள் அந்த சமூக த்தில் உள்ளனர்.
ஆனால், பழைய நடை முறைகள் நகரங் களிலும் மாறுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் இனபெருக்க சுகாதார திட்டத்தை நடத்தி வரும் பிமா லாக்கி.
சில படித்த பெண்களே மறை முகமாக எதிர் மறை கருத்துக்களை வளர்த்து வருவதாக அவர் கூறுகிறார்.
மாறுகின்ற மனங்கள்
நேபாளத்தின் தெற்கில் சுகாதரா பணியாளர் லஷ்மி மாலா சஹௌபாடியை முடிவுக்கு கொண்டு வர உறுதியான பரப்புரையை மேற் கொண்டு வருகிறார்.
தெராய் என்ற பகுதியில் இருக்கும் இதற்கான சிறிய குடிசைகள் மேலே திறந்தே இருப்பவை அல்லது வைக்கோல், பதரால் கூரை அமைக்கப்பட்டவை.
பழைய துணிகளை பயன்படுத்தி பல பெண்கள் ஒரே நேரம் தூங்கும் நிலைமையும் அங்குள்ளது.
பருவ மழையின் போது பாதுகாப்பு இல்லை.
புற்களுக்கு மத்தியில் வாழும் பாம்புகளால் ஆபத்து அதிகம்.
தாங்காடி என்ற இடத்தில் வக்ஸிமி பணிபுரிகிறார்.
சுகாதரா துண்டுகள் விற்கப் பட்டாலும், அவை விலை உயர்ந்தவை. ஆனால், பழைய துணி களை பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
அவற்றை சுகாதார மான முறையில் துவைத்து, பாக்டீரியாவை கொல்லும் அளவுக்கு சூரிய ஒளியில் நன்றாக காய வைத்து, மறுபடியும் பயன் படுத்துவதை அவர் அனைவ ருக்கும் சொல்லி கொடுக்கிறார்.
இந்த முயற்சி மிகவும் கடினம் தான். மக்கள் சண்டை யிட்டனர். சபிக்கவும் செய்தனர். காவல் துறையி னரோடு கிராங்க ளுக்குள் சென்ற நாட்களும் உண்டு.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல மக்கள் மாத விடாய் காலத்தில் பெண்களை வீட்டிற்கு வெளியே சென்று தூங்கச் சொல்வ தில்லை.
இன்னும் ஓராண்டில் இந்த வழக்கம் முற்றிலும் நின்றுவிடும் என்கிறார் லஷ்மி நம்பிக் கையுடன்.
குடிசைகள் உடைப்பு
நேபாளின் மேற்கில் வெகு தொலைவில் இந்த சஹௌபாடி வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இன்னொரு நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்ளூர் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியால், மாஜ்ஹிகாகௌன் கிராமத்தின் இத்தகைய குடிசைகளை எல்லாம் உடைக்கும் பரப்புரை தொடங்கியது.
இதற்கான ஒருங்கி ணைப்பு குழுவில் இருப்பவர் தான் தேவகி ஜோசி.
முற்கால த்தில் மக்கள் குளிப்பது குறைவு. ஆடைகளை துவைப்பது குறைவு. அதனால் இத்தகைய வழங்க ங்கள் தொடங்கியிருக்கலாம்.
ஆனால், இப்போது அவை மாறிவிட்டன. பள்ளியில் கூட சுகாதார துண்டு களை வழங்க தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
ஆனாலும், எல்லோருமே இதனை ஏற்று கொண்டார்களா?
எருமைகள் இருக்கின்ற புதியதொரு இடத்தை சுட்டிக் காட்டி இன்னும் அதே வழக்க த்தை நாங்கள் தொடர்வோம் என்கிறார் சியுதாரிசுனார்.
பழைய சஹௌதாடி வீடுகள் இடிக்கப் பட்டதும் புதியதொரு இடத்தை அதற்கு அவர்கள் ஒதுக்கி யுள்ளனர்.
தேவகி இந்த பணித் திட்டத்தின் வெற்றியில் ஆர்வத் துடன் இருந்தாலும் பெரியோர் சிலர் மனங்களை மாற்றிக் கொள்வ தற்கு தயங்கு வதை ஒப்புக் கொள்கிறார்,
சஹௌபாடி வழக்கம் முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னொரு தலை முறை காலம் பிடிக்கும் என்கிறார். அரசின் உள்ளூர் தலைவர் லீலா காலெ.
அதற்காக ஆண்கள், பெண்கள், மாந்திரீகர்கள் என அனைவ ரோடும் சோந்து உழைத்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்,
நேபாள பெண்கள் தங்களுடைய மாத விடாயை கொண்டாட வேண்டும் என்கிறார் லீலா காலெ.
நம்முடைய ரத்தத்தில் சக்தி இருக்கிறது என்று அவர் களுக்கு கூறுவோம் என்கிறார் லிவா காலெ.