நம்முடைய மூக்கை பராமரிக்கும் முறை !

Fakrudeen Ali Ahamed
பொதுவாக 40 வயதைத் தாண்டியவர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்னையாக இருப்பவை 


‘பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள். சிலருக்கு வெள்ளைப் புள்ளிகளும் தோன்றும்.

தோலில் உள்ள துவாரங்கள் அடைபடும் போது இந்தப் புள்ளிகள் வருகின்றன.

கரும்புள்ளி / வெள்ளைப் புள்ளி வாரம் ஒரு முறை மிதமான வெந்நீரில் சுத்த மான துணியை நனைத்து, புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.

அந்தப் பகுதி மிருதுவாகும். நாள்பட்ட கரும்புள்ளிகள் மிகவும் அழுத்த மாக இருக்கும். 

கடைகளில் விறகும் ‘பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்’ பயன் படுத்தினா லும் முழுவது மாக நீங்காது.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டை யும் தலா 2 எண்ணிக்கை எடுத்து, 

ரவை போல் அரைத்து, சிறிது சந்தனம், சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். 

அதில் ஒரு சிட்டிகை பளிங்கு சாம்பிராணி யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முகத்தை வெந்நீரால் நன்றாகச் சுத்தம் செய்து, இந்த பவுடரை மூக்கின் மேல் வைத்துப் 

புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும்

அல்லது துளசி, புதினா, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு இவற்றை மாற்றி மாற்றி வெந்நீரில் போட்டு ஆவியும் பிடிக்கலாம். 

பிறகு ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

மசாஜ் ஈரப்பசை உள்ள க்ரீமைக் கொண்டு மூக்கில் புள்ளிகள் உள்ள இடத்தில் விரல்களால் பக்கவாட்டிலும் நுனியிலும் மசாஜ் செய்ய வேண்டும்.


வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை அரைவைக் கலவையை மூக்கின் மீது தடவி 

மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும். 

 தொடர்ந்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் புள்ளிகள் வராது.
Tags: