வாழ்க்கையை ரீ-ஸ்டார்ட் செய்ய நினைத்துக் கொண்டு இருக்கும் பெண்ணா நீங்கள்? நீங்கள் முதலில் டெலிட் செய்ய வேண்டியது தாழ்வு மனப்பான்மை. உங்களிடம் அவசியம் தேவை ஆளுமைத் திறன்!
ஆளுமைத் திறன் எல்லாம் ஆண்களு க்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தான் என்று நினைக்கும் இல்லத் தரசியா நீங்க?
உங்கள் குடும்பத்தை, வீட்டு நிர்வாகத்தை, உறவுகளை, நட்பை அரவணை த்துச் செல்ல, அவசியம் தேவையானது ஆளுமைத் திறன்!
ஆளுமைன்னா என்ன? தெளிவா சொல்லுங்கோ எனக் கேட்கும் கண்மணியா நீங்க? அதற்கு தேவையான பொருட் களை... சாரி. தேவையான விஷயங் களைக் கீழே கொடுக்கப்படு இருக்கின்றன. படித்து ஃபாலோ பண்ணுங்க.
தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் கூடவே கூடாது:
’நாம எல்லார் முன்னாடியும் சரியா பேசிருவோமா? நாம பேசினால் மத்தவங்க கவனிப் பார்களா? ஒருவேளை சிரிச் சிட்டாங் கன்னா?‘ எனத் தயங்கியே பல இடங்களில் மெளன விரதமாக இருந்து இருப்போம். இந்தத் தயக்கத்தை ‘சைத்தானே அப்பாலே போ’ எனத் தூக்கி போட்ட தன்னம் பிக்கை தானாக வரும்.
கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பு களையும் பயன் படுத்தி, அதை செய்து காட்டுங்கள். சொதப்பினாலும் டோண்ட் வொரி. மற்றவர்கள் செய்யாத போது, நீங்கள் முயற்சியாவது செய்தீர்கள் என பெருமை படலாம்.
டி.வி-க்கு 'நோ' சொல்லிட்டு, புக்ஸுக்கு 'எஸ்' சொல்லுங்க:
எவ்வளோ நாளைக்கு தான், சீரியலே பார்க்குறது. ஒரு சின்ன சேஞ்சுக்கு புக்ஸ் படிக்கலாமே. மாற்றம், முன்னேற்றம், வேண்டாமா? செய்தித்தாள், வார இதழ், மாத இதழ் என வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
அட! எதுவும் கிடைக்கா விட்டால்.. குழந்தை களின் ஸ்கூல் புக்ஸை யாவது படிங்க. போட்டி தேர்வுகளுக் காவது உதவும். எந்த ஒரு நல்ல புத்தகமும் நம்மளை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களும் நம்பலாம்.
தோற்றத்தில் கவனம்:
ஆளுமையைப் பொறுத்த வரை நம்மளோட தோற்றம் முக்கியம். நாம் அணியும் ஆடையானது ஃபேஷன் என்பதைத் தாண்டி, இடம், சூழலுக்குத் தகுந்த படியும், மற்றவர் களின் கண்களை உறுத்தாத வாறும், உங்கள் உடல் வாகுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். அப்படிப் பொருத்த மான ஆடை அணியும் போது இயற்கை யாகவே ஒரு தன்னம் பிக்கை கிடைக்கும்.
அப்டேட் ப்ளீஸ்:
இந்த `டெக்கி சூழ்' உலகத்தில் தொழில் நுட்பம் தெரியாமல் ஆளுமை யுடன் செயல் பட முடியாது. ‘நான் பார்க்கும் வேலைக்கு அதெல்லாம் தேவை யில்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லத் தரசிகள் குறைந்த பட்சம் மெயில் அனுப்புவது, ஆன்லைனில் டிக்கெட் புக்கிங், போனுக்கு ரீசார்ஜ் செய்வது போன்ற அடிப்படை விஷயங் களைக் கற்றுக் கொள்ளு ங்கள்.
வெயிட்... வெயிட்... இதுமட்டும் இல்லை.
அப்டேட்.. நாட்டு நடப்பு தெரிந்துக் கொள்வதும் இந்த லிஸ்டில் தான் சேரும். அதுனால ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது நியூஸ் சேனல் பாருங்க. மற்றவர் களுடன் உரையாடும் போது, நாட்டு நடப்பு, அரசியல், சினிமா என நீங்கள் பேசும் போது, விபரம் தெரிந்தஞ்ச வங்க என்ற பெயர் கிடைக்கும்.
கேலி , கிண்டலுக்கு தடா:
வீட்டிலோ அலுவல கத்திலோ, நெருங்கிய தோழியோ எதையாவது பேசிவிட்டு, ‘ஹே. சும்மா ஜாலிக்கு சொன்னேன்' என்பார்கள். உங்களின் சுய மரியா தையைச் சிதைப்பதாக அந்த ஜாலி வார்த்தைகள் இருந்தாலும் அதை அனுமதிக் காதீர். எல்லாத்து க்கு ஒரு லிமிட் உண்டு என நாசூக்காக பேசி புரிய வையுங்கள். அதே நேரம், உங்களின் வார்த்தைக ளும் அவ்வாறாக அமையக் கூடாது என்பதை மெமரியில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆர்.யூ. ஓ.கே பேபி:
எப்போ பார்த்தாலும் குடும்பம், குழந்தை, வேலை என நீங்கள் ஓடிக்கொண்டு இருந்தால் உங்களை யாரு பார்த்துக்குவா? அதுவும் நீங்கள் தான் ! அதுனால, தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, அந்த நேரத்தில் ஒரு ரூமுக்குள் சென்று விடுங்கள். ரூமில் ஆடுவது, பாடுவது, சத்தமாக சிரிப்பது என உங்களுக்கு தோணுவதை செய்யுங்கள்.
மேலும் நீங்கள் செய்யும் வேலைக் கான அங்கீகாரம், பாராட்டு கிடைக் கலையே, என் பேச்சை கேட்கலையே என யாரையாவது திட்டுவது என்றால் எதோ பொம்மையை இஷ்டம் போல் திட்டுங்கள், அடிக்க வேண்டும் என்றால் தலையணை எடுத்து அடித்து துவம்சம் செய்யுங்கள்.
அப்பறம் உங்களை நீங்களே ‘நவ்.. ஆர். யூ. ஓகே பேபி’ என்று கேட்டுக் கொள்ளு ங்கள். அப்போதும் மன அமைதி கொள்ள வில்லை என்றால் மறு படியும் முதலிருந்து ஆரம்பி யுங்கள். மன அழுத்ததை குறைக்க இது போன்ற சின்னச் சின்ன செயல்கள் செய்தே ஆக வேண்டும். செய்யா விட்டால், இந்த ஜில் கிளை மேட்டிலும் உச்சி வெயிலில் நின்ற மாதிரி முகம் சிவந்து போயி, ரொம்ப உக்கிரமா இருப்பீங்க.
அப்பறம் டென்ஷன், தலைவலி, பி.பி வரும். மருத்துவ மனைக்கு அலையனும், செலவு செய்யனும். ஜாக்கிரதை! வாடி ராசாத்தி என உங்களுக்கு நீங்களே பாடிக் கொண்டு.. ‘36 வயதினிலே’ ஜோதிகா மாறி அப்படி கம்பீரமாக நடந்துப் பாருங்க.. உங்க தன்னம்பிக்கை வேற லெவலுக்குப் போகும்.