மனைவியின் மனதில் எப்படி இடம் பிடிக்கலாம்?

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
உங்கள் மனைவி உங்களிடம் பேசும் போது அவர்கள் சொல்வதை நன்றாக கவனி யுங்கள்.. (தங்கள் சொல்லிற்கு மதிப்பு தருவதில் பெருமிதம் கொள் வார்கள்..) குடும்ப விஷயங் களில் உங்கள் மனைவி யின் கருத்து களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள்.. (அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது..!) உங்கள் மனைவி யிடம் உள்ள தனித் திறமையை உணர்ந்து, மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.. 
அதிகமாக எதிர்பார்க்கும் அங்கீகாரம்
(பெண்கள் தங்களை பாராட்டு வதையும் புகழ் வதையும் அதிகம் நேசிப்பார்கள்..) உங்கள் மனைவி யிடம் பொய் சொல்வதை தவிருங்கள்.. (கணவன் சொல்லும் பொய்களை அவர்கள் விரும்புவதில்லை...) உங்கள் மனைவி யிடம் அடிக்கடி குற்றம் கண்டுப் பிடித்துக் கொண்டு இருக்கா தீர்கள்..(அதிலும் குழந்தைகள் முன் தங்களை குறைக் கூறுவதை பொது வாகவே பெண்கள் விரும்புவ தில்லை..) 

உங்கள் மனைவி யின் ஆடை அலங் காரத்தை ரசித்து வர்ணியுங்கள்.. (உங்கள் வார்த்தைகள் தரும் மகிழ்ச்சி, அவர்கள் மன நிறைவிற்கு வித்திடும்..) உங்கள் மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவர்களு க்கு உதவுங்கள்.. (அவர்கள் அதை எதிர்ப் பார்க்கா விட்டாலும், ரசிப்பார்கள்..) எவ்வளவு பிரச்னை வந்தாலும், மனைவியின் பிறந்த வீட்டினரை அவமானப் படுத்தும்படி பேசாதீர்கள்.. 
மனைவி வீட்டு வேலை செய்யும் போது உதவுங்கள்
(இதனால் அவர்கள் மனதில் உங்கள் வீட்டினரை பழி வாங்கும் வெறுப்புணர்ச்சி யாக மாறி விடக் கூடும்..) உங்கள் மனைவியின் பிறந்த நாளையும், உங்கள் திருமண நாளையும் நினைவில் வைத்து, அந்த நாட்களில் அவர்களை கோவிலுக்கோ அல்லது அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறவா தீர்கள்.. (மற்ற நாட்களை விட, இதுப் போன்ற நாட்களில் கணவனுடன் இருப்பதை பெண்கள் பெரிதும் விரும்பு வார்கள்..) 

உங்கள் மனைவி குழந்தை பெற்றுத் தரும் இயந்திரம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் எண்ணங் களுக்கு மதிப்புக் கொடுங்கள். (தன்னை மதிக்கும் கணவனுக்கு பணிவிடை செய்வதில் முதலிடம் தருபவர்களும் அவர்களே..) உங்கள் மனைவி எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு பிடித்த சேலை மற்றும் சுரிதாரை பரிசாக அளித்து அவர்களை மகிழ்வித்து மகிழுங்கள்..!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 12, April 2025