அம்மாவின் உள்ளாடை களை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்கு கிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங் குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்து விட்டது’ என்று அர்த்தம். 
சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியம்
அந்த கால கட்டத்தில் அவள், உடல் வளர்ச்சி யின் முதல் கட்டத்தை அடைந்தி ருப்பாள். ஆனாலும் அவள் சிறுமி தான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவ மாக செயல்பட வேண்டும். 
 
சிறுமி களுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத் தொடங்கும். அந்த வயதில் தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். 
 
அப்போதே ‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்து விட வேண்டும். பிரா எப்போதி ருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! 
 
சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போதி ருந்து அணிய ஊக்கு விக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக் குள் மார்பு வளர்ச்சி தொடங்கும்.
 
12-13 வயதில் பிரா அணியும் வளர்ச் சியை சிறுமிகள் எட்டி விடுவார்கள். எல்லா சிறுமி களுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மன நிலையை அடையத் தான் செய்கிறார்கள். 
‘தன்னோடு படிக்கும் தோழி பிரா அணிந்து வருகிறாள்? தான் ஏன் இன்னும் அத்தகைய வளர்ச்சியை பெற வில்லை?’ என்ற கேள்வி பல சிறுமி களிடம் ஏற்படும். 
 
சில சிறுமிகள் தாயிடம், ‘என் தோழிகள் யாரும் இது வரை அணிய வில்லை. நான் மட்டும் ஏன் அணிய வேண்டும்? எனக்கு அது அசவுகரி யமாக இருக்கிறது!’ என்று கூட சொல்லலாம். 
 
வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும். அவர் களிடம் தாய்மார்கள் பிரா அணிய வேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக எடுத்து ரைக்க வேண்டும்.
 
அதோடு மொத்த மாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தி யாக்க வேண்டும். பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந் திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச் செய்ய வேண்டும். 
 
அவ்வாறு உடை அணியச் செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்தி ருப்பது தெரிய வில்லை. 
பிரா அணிய வேண்டிய அளவு
அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது அவசியம்’ என்பதை ஆதாரபூர்வ மாக உணர்த்த வேண்டும். சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்தி ருப்பார்கள். 
 
ஆனால் பிரா அணிய வேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா அணிய வேண்டும் என்று அடம் பிடிக்கலாம். அவர்களுக் குரிய பிராக்களும் இருக்கி ன்றன. 
 
அதை வாங்கிக் கொடுத்து அணியச் செய்ய வேண்டும். மாறாக, ‘உனக்கு மார்பக வளர்ச்சி யில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவை யில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்து போகும். 
ிலர் மார்பு வளர்ச்சி வெளியே தெரியக் கூடாது என்பதற் காக மார்பை இறுக்கி சமமாக காட்டும் பிராவை அணிய விரும்பு வார்கள். நிமிர்ந்து நடக்க தயங்கி, கூன் வளைந்த நிலையில் நடக்கவும் செய்வார்கள். 
 
இது தவறான அணுகு முறை. இதனால் மார்பின் நேர்த்தியான தோற்றமும், தன்மையும் பாதிக்கப் படும். 
 
இதை எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச் சொல்லி மனப் பூர்வமாக, மகிழ்ச்சி யோடு உடலுக்கு பொருத்த மான பிராவை அணிய ஊக்குவிக்க வேண்டும். 
 
ஒரு சில சிறுமிகள் தோழிகளை விட தங்களு க்கு மார்பு வளர்ச்சி மிக குறை வாக இருப்பதாக கருதுவார்கள். 
 
அதற்கு சரியான விடை காண முடியாமல் பேசிப்பேசி மன அழுத்தத் திற்கு உள்ளாகு வார்கள். அப்படி ஒரு கவலை உங்கள் மகளுக்கு ஏற்பட்டி ருந்தால் எளிதாக அதை கையாண்டு சரி செய்திடலாம்.
‘மார்பக வளர்ச்சி ஒவ்வொரு வரது உடல் வாகுக்கு ஏற்ற படியும், பாரம்பரிய த்திற்கு ஏற்ற படியும் இருக்கும். 
 
நாளடை வில் வளர்ச்சி சரியாகி விடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த பிராவை வாங்கிக் கொடுத்து அணிய செய்ய வேண்டும். 
 
அதன் மூலம் மனக் குறையை போக்கி விடலாம். இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத் திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷய மாக எடுத்துக் கொள் வார்கள். 
பிராக் களை எப்படி பராமரிக்க வேண்டும்?
மார்பகங்கள் இரண்டும் ஒன்று போல் இருப்ப தில்லை. லேசான மாற்றங்கள் இயற்கை யானது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். 
 
உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்த மான பிராவை வாங்கிக் கொடுங்கள். 
 
வாங்கிய பின்பு அது சரியாக அமையா விட்டால், தயங்காமல் அதை தூக்கி வீசி விட்டு, பொருத்த மானதை வாங்கி அணியச் செய்யுங்கள்.
 
வளரும் பெண் தானே பெரிதாக வாங்கிக் கொடுப்போம் என்று அளவில் பெரிதாக இருப்பதை வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். பெரும் பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவை களிலும் பயிற்சி பெறுகி றார்கள். 
சாதாரண மாக அணிவ தற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவத ற்கும் வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விளை யாட்டிற்கு தகுந்தபடியும், நடனத்திற்கு தகுந்தபடியும் பிரா வாங்கிக் கொடுங்கள். 
 
வாங்கிக் கொடுக்கும் போதே கடை களில் உள்ளவர் களிடம், ‘பிராக் களை எப்படி பராமரிக்க வேண்டும்?’ என்பதையும், மகளிடம் கூறச் செய்யுங்கள். 
 
அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.