கணையத்தை ஒரு எரிமலை என்று சொல்வார்கள். பல நேரங்களில் சாதுவாக இருக்கிற கணையம் திடீரென்று எரிமலையாகப் பொங்கி விடும், 
எனவே,
 இச்சுரப்புநீர்கள் கணையத்திலிருந்து உடனுக்குடன் முன் சிறு குடலுக்குச் 
சென்று விட வேண்டும். இல்லை யென்றால், கணையத்துக்கே அது ஆபத்தாகி விடும்.  
கணையம் சில காரணங்களால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப்படலாம். அப்போது 
கணையம் வீங்கி விடும். 
பிறகு அழுகி விடும். இறுதியாக கணையத்தில் ரத்தப் 
போக்கு ஏற்படும். அந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) 
என்கிறோம். 
இது இரண்டு முக்கியமான காரணங்களால் ஏற்படுகிறது. 
1. மிகையாக மது அருந்துவது 
2. பித்தப் பையில் கற்கள் (Gall stones ) உருவாவது. 
மிகை
 மது :.
அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் கணையக் குழாயில் ஒரு வகை 
புரதப்பொருள் படிந்து நாளடைவில் அந்தக் குழாயை அடைத்து விடும். 
அப்போது 
கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் அங்கேயே தங்கி, கணையத்தின் செல்களை 
அழித்து விடும். இதனால் கணைய அழற்சி ஏற்படும். 
அடுத்து,
 மதுவானது புரோட்டியேஸ், லைப்பேஸ், அமைலேஸ் ஆகிய என்சைம்களின் உற்பத்தியைக்
 கூட்டுகிறது. 
அதே நேரத்தில் ‘ட்ரிப்சின்’ எனும் என்சைம் சுரப்பைக் 
குறைக்கிறது. இதனாலும் கணையத்தில் அழற்சி ஏற்படுகிறது. 
இது பெரும்பாலும் 
ஆண்களுக்கே வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற் கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. 
பித்தப்பைக்
 கற்கள் :.
பித்தப்பையில் கற்கள் உருவாகி பித்தக் குழாயை அடைத்து விடுமானால், 
பித்தநீர் மற்றும் கணைய நீர்கள் முன் சிறு குடலுக்குள் நுழைய முடியாமல், 
மீண்டும் கணையத் திற்கே திரும்பி விடும்.
அதன் விளைவாக இந்த நீர்கள் 
கணையத்தின் செல்களை அரித்து விடுவதால், கணையத்தில் அழற்சி தோன்றும். 
இதர 
காரணங்கள் அடிக்கடி கப்பைக் கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள 
‘கிளைக்கோசைட்’ எனும் வேதிப்பொருள் காரணமாக கணைய அழற்சி ஏற்படுவதுண்டு. 
அசத்தியோ
 பைரின், தயசைடு, சோடியம் வால்பிரவேட் போன்ற மருந்து களைத் தொடர்ந்து 
பயன்படுத்தும் போது, அவற்றின் பின் விளைவாக கணைய அழற்சி ஏற்படலாம். 
சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து 
விடும். இதனாலும் கணையம் பாதிக்கப்படலாம். 
பரம்பரைக் கோளாறுகள், 
புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள், விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்ற 
வற்றாலும் கணையம் பாதிக்கப் படலாம். 
அறிகுறிகள்
 பாதிக்கப்பட்ட நபருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்படும். இந்த வலி மேல் 
வயிற்றில் ஆரம்பிக்கும். பின்பு முதுகுப் பக்கத்துக்குப் பரவும். 
சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். 
முன்பக்கமாக சாய்ந்து 
உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும். இந்த 
நோய்க்கு இது ஒரு முக்கிய அறிகுறி. குமட்டல், வாந்தி இருக்கும். வயிறு 
உப்பும். நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 
இரைப்பைப்
 புண் உள்ளவர் களுக்கும் இதே போன்று தான் வயிற்றுவலி இருக்கும். ஆனால், 
அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்து விடும். 
கணைய 
அழற்சி உள்ளவர் களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்று வலி குறையாது. அடுத்து,
 மஞ்சள் காமாலை ஏற்படும். வயிற்றில் நீர் கோர்த்து வயிறு உப்பும். ரத்த 
வாந்தி வரும். 
மலத்தில் ரத்தம் போகும். இறுதியில் `கோமா’ எனும் ஆழ்நிலை 
மயக்கத்துக்கு உள்ளாவார்கள். 


