பருமனைக் கட்டுப் படுத்துங்கள் பருமனாக இருப்பவர் களுக்கு இன்சுலின் தேவை
அதிகரிக்கிறது. கணையம் நிறைய இன்சுலினை சுரந்து நாளடைவில் களைத்து
விடுகிறது. இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போகிறது.
இதன் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது.
1. மது அருந்துவதை அறவே தவிர்க்கவும்.
2. பித்த பையில் கற்கள் உருவானால் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும்.
3. மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா நோய்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
4. நீங்களாக மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்தவும்.
5. புகையில் வாட்டி தயாரிக்கப் படுகின்ற உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
6. கலப்பட எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
7.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தா
தீர்கள். 8. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக்
குறைத்துக் கொள்ளவும். 9. புகைப்பதை நிறுத்தவும். 10. பழங்கள், காய்கறிகள்
நிறைந்த ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.