பெண்கள் கருத்தரிப்பது எப்படி?

Fakrudeen Ali Ahamed
0
"பருவம் அடைவதற்கு முன் ஒரு பெண் கருத்தரிக்க முடியும் ! "பருவம் அடைவதற்கு முன் ஒரு பெண் கருத்தரிக்க முடியாது என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள், இது தவறு வியப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. பெண் பருவம் அடைகிறாள் என்றால், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அவள் கருத்தரிக்க தயாராகி விட்டாள் என்பது தான் உண்மை. 
பெண்கள் கருத்தரிப்பது
பருவம் அடைந்த பெண்ணுக்கு மாதம் ஒரு சினை அணு உருவாகி கருவுற தயாராக இருக்கும். அந்த சினை அணுவுடன் விந்தணு சேர்ந்தால் கரு உண்டாகும். சேரவில்லை என்றால் சுமார் 15 நாட்கள் கழித்து சிதைந்து மாத விலக்காக வெளிவரும். அப்படி எனில் ஒவ்வொரு மாத விலக்கிற்கு 15 நாளுக்கு முன் அவள் கருத்தரிக்க தயாராய் இருக்கிறாள் என்று பொருள். 

அவ்வாறு நோக்கின் , ஒரு பெண் பருவம் அடைந்ததாக நாம் கூறும் முதல் மாதவிலக்கிற்கு 15 நாட்களுக்கு முன்னமே அவள் கருத்தரிக்க தயாராய் இருக்கிறாள் என்பதே உண்மை. அப்படி இருக்க பருவம் அடைவதற்கு 15 நாளுக்கு முன் பருவம் அடைந்த ஆணுடன் உடலுறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டு . 

முதல் மாதவிலக்கு என்பது அவள் கருவுற வில்லை என்பதன் அடையாளம் மட்டுமே. அதற்க்கு முன்னமே அவள் கருத்தரிக்க தயாராகி விடுகிறாள். அப்படி இருக்க பெண்ணுக்கு முதல் விலக்கு வரும் நாளை வைத்து ருது பிறப்பியம் (ஜாதகம்) கணித்து பலன் கூறுவது எவ்வளவு பெரிய மடமை! அவள் தான் அதற்க்கு முன்னரே பருவம் அடைந்து விட்டாளே !
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)