பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைகிழங்கு !

Fakrudeen Ali Ahamed
0
கிழங்கு வகைகளுள் நீண்ட காலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. இவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், ஈரம் நிறைந்த உஷ்ணப் பிரதேசங்களில், இக்கிழங்குகள், பரவலாக பயிரிடப்படுகின்றன.
பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைகிழங்கு !
சேனை கிழங்குகள் தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. 
 
இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப் படுகின்றன. ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும். 
 
அதனால் இக்கிழங்கைக் காய்கறி யாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்து கிறார்கள்.  இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்கு கிறார்கள். 
நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலிய வற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது.

குழந்தை களுக்கும், வயதானவர் களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும். பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக் கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில்,
புரதம் 1.2 கிராமும்,

தாது உப்புகள் 0.8 கிராமும்,

மாவுச்சத்து 18.4 கிராமும்,

வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும்,

ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும்,

கால்சியம் 50 மி.கிராமும்,

இரும்பு 0.6 மி.கிராமும்,

தயாமின் 0.06 மி.கிராமும்,

நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன.
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும். உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக் கின்றனர்.
ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக் கிழங்கு இருந்து வருகிறது. 
 
இலட்சகணக்கான ஆப்பிரிக்க ர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக் கிழங்கு இருந்து வருகிறது.
 
குழந்தை களுக்கும் வயதானவர் களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.
இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதான வர்களின் எலும்பு பலவீன மடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலிய வற்றையும் இது குணமாக்குகிறது.
பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைகிழங்கு !
பஞ்ச காலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால் தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக் கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக் கிறார்கள். 
 
‘பி’ தொகுதி மாத்திரை களைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரை க்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !
அமெரிக்கா வில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக் கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது. 
 
தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)