காய்கறிகள் உடலுக்கு தரும் அழகு !

Fakrudeen Ali Ahamed
0
நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் 
காய்கறிகள் உடலுக்கு தரும் அழகு
அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும்!
கேரட்: 

விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கரட்டை பால் விட்டு விழுதாக அரைத்து, 
 
முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு: 
உருளைக் கிழங்கு தரும் அழகு
இதன் சாறு எடுத்து கரும்புள்ளி களின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். 
 
உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.

முட்டைக்கோஸ்: 

எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.

புதினா: 
முட்டைக்கோஸ் தரும் அழகு
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.

கொத்தமல்லி:  
 
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
அரைக்கீரை: 

அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.

பப்பாளி: 
பப்பாளி தரும் அழகு
நன்கு கலந்த பப்பாளிப் பழக்கூழ் சிறிதுடன். கொஞ்சம் தேன், கொஞ்சம் பால் பவுடர் கலந்து பேஸ்ட் போலச் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தடவி, கால் மணி நேரம் கழித்துக் கழுவலாம். 
 
வாரம் இரண்டு முறைகள் இப்படிச் செய்து வந்தால், உங்கள் முகம் ஃபேர்னஸ் கிரீம் இல்லாமலேயே நிறமாகும்.
நஞ்சால் நாசமாகி வரும் வாழ்க்கை எச்சரிக்கை!
தக்காளி: தக்காளிப் பழத்தை மசித்து, அதை அப்படியே முகம், கழுத்து, கை, கால்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவிட, சருமத்தில் தென்படும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைந்து சருமம் சுத்தமாகும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)