உங்கள் குழந்தைக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துகிறீர்களா? கவனம் !

Fakrudeen Ali Ahamed
0
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடியது டால்கம் பவுடர். முகம் மட்டுமின்றி, உடலுக்கு இந்தப் பவுடரை உபயோகிக் கிறோம். 
உங்கள் குழந்தைக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துகிறீர்களா? கவனம் !
ஈரத்தன்மையை உறிஞ்சக் கூடியதும், உலர்ந்த சருமத்தில் சொறி வருவதைத் தடுக்கக் கூடியதுமானது டால்கம் பவுடர். 
 
மக்னீசியம், சிலிகான் மற்றும் ஆக்சிஜன் சேர்ந்த டால்க் (Talc)எனும் கனிம கலவையால்தான் இந்த பவுடர் தயார் செய்யப் படுகிறது. 
 
ஆனால் டால்க் அதன் இயற்கையான வடிவில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பொருளைக் கொண்டுள்ளது. 

டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இருந்தால், சுவாசிக்கும் போது நம்மையும் அறியாமல் அது செல்லும் போது, புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

ஆனால், இப்போது கடைகளில் விற்கப்படும் பவுடர்களில், டால்க் எனும் கனிமம் இல்லை யென்று சொல்லப் பட்டாலும், அது ஆஸ்பெஸ்டாஸ் அல்லாத டால்க் தானா என்று உறுதிப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. 
டால்கம் பவுடரை பெண்கள் பிறப்புறுப்புப் பகுதியிலோ அல்லது சானிட்டரி நாப்கினிலோ வைத்துப் பயன்படுத்தி னால் அது கர்ப்பப்பை, கருக்குழாய் வழியாகச் சினைப்பையைச் சென்றடையும். 
 
சினைப்பையைச் சென்றடையும் சூழலில் டால்க் காரணமாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப் பட்டன. 

அதில் ஓர் ஆய்வின் முடிவில் டால்கம் பவுடர் பயன்படுத்திய பெண்களுக்கு, சினைப்பைப் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பது கண்டறியப் பட்டது. ஆனால், இதுதொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை.
டால்க் கனிமத்தை எடுக்கும் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 
 
ஆனால், இந்த முடிவு டால்கம் பவுடர் பயன்படுத்து வோருக்குப் பொருந்தும் என்று கூற முடியாது. 

காரணம், சுரங்கத்தில் எடுக்கப்படும் டால்க், இயற்கையாகக் கிடைக்கும் போது அதிகமாக ஆஸ்பெஸ்டாஸ் போன்ற பல கனிமங்களைக் கொண்டிருக்கும். 
 
ஆனால், டால்கம் பவுடர் பலமுறை சுத்திகரிக் கப்பட்ட பின்னரே, பயன்பாட்டுக்கு வருவதால், அதில் ஆஸ்பெஸ்டாஸ் மிகக் குறைந்த அளவோ அல்லது இல்லாமலோ கூட இருக்கலாம். 

இதற்கு மேலாக சுரங்கத் தொழிலாளர்கள், சுரங்கத்தில் வேலை செய்யும் போது கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுகூட அவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 
 
பிரபலமான ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனை உரிமை அங்கீகாரத்தை இழந்தது நினைவிருக்க லாம். 

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), அந்த நிறுவனத்தின் குழந்தை களுக்கான பவுடர்களைப் பரிசோதித்ததில், அதைச் செறிவுபடுத்த எத்திலீன் ஆக்சைடு என்னும் வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
எத்திலீன் ஆக்சைடு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாகும். எத்திலீன் ஆக்சைடு பவுடர் தயாரிக்கும் போது, அதன் சுத்திகரிப்பு பணியின் போது பயன்படுத்தப் படுகிறது. 
 
ஆனாலும், அனைத்துத் தயாரிப்பு முறைகளும் நிறைவடைந்த பிறகு, அந்த பவுடரில் இந்த வேதிப்பொருளின் எச்சம் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க அந்த நிறுவனம் தவறிவிட்டது.

உலகச் சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் `இன்டர்நேஷனல் ஏஜென்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர்' (IARC) எனும் சர்வதேச அமைப்பு, 
 
ஆஸ்பெஸ்டாஸ் உள்ள டால்க் மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக் காரணமாக இருப்பதாகக் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் டால்கம் பவுடரை தங்களது பிறப்புறுப்புகளிலும், சானிட்டரி நாப்கின்களிலும் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். 
 
மேலும், எந்த டால்கம் பவுடரைப் பயன்படுத்து வதற்கு முன்பும், அதில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். 
ஒப்பனைப் பொருள்களைக் கட்டுப்படுத்தும் அரசின் கட்டுப்பாட்டு நிறுவனம் டால்கம் பவுடரில், ஆஸ்பெஸ்டாஸ் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா?

அமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது. 
 
பவுடரில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசம் தொடர்பான பிரச்னைகளையும், ஆபத்தான நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். 
உங்கள் குழந்தைக்கு டால்கம் பவுடர் பயன்படுத்துகிறீர்களா? கவனம் !
பவுடரின் துகள்கள் எளிதாக சுவாசம் வழியாக, நுரையீரலைச் சென்று சேர்ந்துவிடும். சுவாசப் பாதையால், அந்த பவுடர் துகள்கள் உள்ளே போவதைத் தடுக்க முடியாது. 
 
குறைமாதக் குழந்தைகள், பிறவி இதயக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, மிகவும் குறைந்த அளவு பவுடர் கூட நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம்.

அதனால் குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக படவுர் பயன்படுத்த வேண்டும். 
 
குழந்தையின் உடலில் நேரடியாக பவுடரைக் கொட்டாமல், பெற்றோர் தங்கள் கைகளில் தட்டி, அதைக் குழந்தைகளு க்குப் போடலாம். குழந்தைகள் தாங்களாகவே பவுடர் போடுவதைத் தவிர்க்க வேண்டும். 

வீட்டில் பவுடர் டப்பாவை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்கெனவே போட்ட பவுடரை துடைத்து எடுக்காமல், மேலும் மேலும் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும்.
குழந்தைக்கு ஒவ்வொரு முறையும், டயாப்பர் (Diaper) மாற்றும் போது ஏற்கெனவே பூசியிருக்கும் பவுடரைத் துடைத்து எடுத்து விடவும். 
 
குழந்தையின் தோல் மடிப்புகளில் இருக்கும் பவுடரை, நன்றாகத் துடைத்து எடுக்கவும். பெண் குழந்தை களுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 
 
பொதுவாக ஒவ்வாமை குறைவான (Hypo Allergenic) அல்லது ஆர்கானிக் முறையில் தயாரித்த பவுடர்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)