குழந்தைகளின் கல்வித் திறனை பிறந்த உடன் கண்டுபிடிக்க – ஆய்வில் தகவல் !

Fakrudeen Ali Ahamed
ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப் பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்திருக் கிறார்கள். கல்வியில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாகச் செயல் படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 
சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப் படுவதற்கு மூன்றில் இரண்டு பங்குக் காரணம் அவர்களது மரபணுக்கள் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

ஆரம்பப் பள்ளியில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஒரு குழந்தை தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படிப் பங்காற்று கின்றன என்பது தெரியவில்லை. 

இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் “இரட்டையர் களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி” குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர்.
அவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன. இந்தப் புதிய ஆய்வின்படி, இரட்டை யர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள்.

இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது.

இரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணுக் காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களை ஆய்வாளர்கள் கணக்கிட் டுள்ளனர். 

ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர் களின் மரபணுக்கள் தோராயமாக 50 சதவிகிதம் தான் ஒத்துப் போகின்றன.

70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப் படுகிறது

அதாவது ஏனைய உடன் பிறந்தவர் களைப் போல, ‘பள்ளிக் கல்வியில் சாதனை’ போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர் களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்க ளால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.

இதனை வைத்துக் குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாகத் தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப் படுகிறது என்பதைக் கணக்கிட முடியும். 70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப் படுகிறது என்பதைத் தான் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர் களின் ஒரே மாதிரியான சூழலாலும் – அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிக ளாலும் தீர்மானிக்கப் படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. 

மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப் படுகிறது.

கல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது, அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற் கான பெரும் பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வது தான் என்பதைக் கண்டறிந் துள்ளனர்.

பள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப் பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இரட்டை யர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய் மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப் பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு – அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருக்கின்றன.
சமீபத்தில், இன்னும் சக்தி வாய்ந்த முறையில் ஆராயும் முறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. அதனடிப் படையில் தனித்தனியாக மரபணு மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக் கான மரபணுக் குறியீடுகளை ஒன்று திரட்டி GWAS ஆய்வு செய்திருக்கிறது.

இந்த மதிப்பீடைப் பயன்படுத்தி, இன்னும் துல்லியமாக – ஒருவருக் கொருவர் தொடர்பில்லாத மனிதர் களிடையே, பள்ளிகளில் செயல்திறன் குறித்தும், அவர்களது பண்புகளில் ஏற்படும் வித்தியாசம் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தப் புதிய ஆய்வின் ஒரு பகுதியாக, இதற்கு முந்தைய GWAS ஆய்வின் அடிப்படை யிலான கல்வி குறித்த மரபணுக் குறியீடுகளின் தகவல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.

இதைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், நாங்கள் 6000 ஜோடி இரட்டையர் களுக்கான மதிப்பெண்ணைத் தனித் தனியாகக் கணக்கிட்டோம்.

அது அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்திறன் ஆற்றுவார்கள் என்பதைக் கணித்தது. இந்தக் கணிப்புகளின் படி, ஆரம்பப் பள்ளிகளில் 4 சதவீதமும் பள்ளிக் கல்வி நிறைவுறும் தருவாயில் 10 சதவீதமும் வித்தியாசப் பட்டன. 

இது முன்பு நாங்கள் மேற்கொண்ட இரட்டையர்கள் பற்றிய ஆய்வின் முடிவை உறுதிப் படுத்தியது.
பிறந்தவுடன் மரபணுச் சோதனை மேற்கொள்வ தால், கற்றல் தொடர்பாகக் குழந்தை களின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப் பட்டால், அவைகளின் மீது கவனம் செலுத்த முடியும்.

மரபணுக்கள், பள்ளிக் கல்வி முழுவதுமான காலக் கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகக் கவனம் தேவைப்படும் குழந்தை களுக்குக் கூடுதலான ஊக்கத்தைக் கொடுப்பது குறித்து எங்கள் ஆராய்ச்சி தெளிவு படுத்துகிறது.” என்கின்றனர்.
எதிர்காலத்தில், மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச் சூழல்கள், அதாவது அக்கம் பக்கத்திலி ருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினை களைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும். 

அதன் மூலம் அவர்களுக்குத் தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.

அந்த வகையில், வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினை களை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்ட ப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.
Tags: