இதய நோய்களைத் தடுக்கும் சோளம்... கொழுப்பை குறைக்கும் !

Fakrudeen Ali Ahamed
0
ஆரோக்கிய உணவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்த படியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளுள் ஒன்று. சமீப காலமாக சிறு தானிய வகைகளான கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

சிறு தானியங்களில் பல இருந்தாலும் சோளம் முதன்மையான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. சோளம் ஒரு அருமையான உணவுப் பொருள். பார்லி அரிசிக்கு நிகரான சத்துக்கள் இதில் உள்ளன. கோதுமையில் உள்ள புரதச் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. SweetCorn கண் குறைபாடு களை சரி செய்யும் தன்மை இதில் அதிகமாக உள்ளது. அனைத்து வயதினரும் உண்பதற்கு ஏற்ற சோளம், சுலபமாகவும் செரிக்கக் கூடியது மாகும்.

சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கி யுள்ளதால், இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. கோதுமையில் உள்ள புரதச்சத்தை விட சோளத்தில் உள்ள சத்து சிறப்பு வாய்ந்தது. சோளம் உடலுக்கு நல்ல பலத்தையும், ஆரோக்கிய த்தையும் கொடுக்கக் கூடியதாகும்.
ஆராய்ச்சிகள் மூலம சோளத்தில் உள்ள நார்ச்சத்து ஆக உடலில் மாற்றப்படுகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது. இது, குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக் கூடியது. 184சோளத்தில் உள்ள சத்துக்கள் உடல் செரிமான சக்தியை அதிகளவு இல்லாமலும் குறைந்த அளவு இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது. 

இதனால் இரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு சம நிலையில் உள்ளதால் கண்டறியப் பட்டுள்ளது. நல்ல கண் பார்வைக்கு மக்காசோளம் சிறந்தது. மக்காசோளம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)