உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !

Fakrudeen Ali Ahamed
நான் இங்கு எழுத இருப்பது எனது சொந்த பிரசவ அனுபவம் ஆகும். எனக்கு வீட்டிலேயே தான் பிரசவம் நடக்க வேண்டும் என்று ஆசை.. 
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில்
என்னை போலவே வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தவர்களுக்கு எனது கதை ஒரு பாடமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
 
வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட முடிவு. 
 
எங்களுடைய இந்த முடிவுக்கு காரணம், எங்களது குழந்தைக்கு மருத்துவ மனையின் வாசனை இருக்க கூடாது என்பதும், 
 
எனது பிரசவம் பரபரப்பான ஒரு சூழ்நிலையில் மருத்துவர்களின் முடிவின் அடிப்படையில் நடக்க கூடாது என்பதும் தான்...!

நீண்ட நாள் யோசனை

எனக்கு குழந்தை பிறக்கும் போது வயது 37. நானும் என் கணவரும் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவை மிக நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு தான் எடுத்தோம். 
 
எங்களது குழந்தை இயற்கையான முறையில் பிறக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரது ஆசையாக இருந்தது..

கற்றுக் கொண்டோம்
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !
எனக்கும் எனது கணவருக்கும் ஒரளவு மருத்துவ அறிவு இருந்தது.. மேலும் எங்களது நண்பர்களாக இருந்த மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பிரசவம் சம்மந்தபட்ட முக்கிய விஷயங்களையும், 
 
வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் போது எந்த எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

பெற்றோரின் யோசனை

மேலும் இது பற்றி எங்களது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசிய போது, பிரசவத்தின் போது ஏதேனும் இக்காட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டால், மருத்துவ மனையின் உதவியை நாட வேண்டியிருக்கும்.

அதனால் நீங்கள் மருத்துவ மனையில் முன்னேச்சரிக்கையாக ஒரு முன்பதிவையும், தேவையான பரிசோதனை களையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.. 
 
நாங்களும் அதன் படி முன்பதிவு செய்து, தேவையான பரிசோதனை களையும் செய்து கொண்டோம்.

இயற்கையான முறையில் பிறக்க வேண்டும்

நாங்கள் மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை..  ஏனென்றால் எங்களது குழந்தை மருந்துகள் இல்லாமலும், இயற்கையான முறையிலும் பிறக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை.. 
 
மேலும் மருத்துவ மனைக்குள் நுழைந்தது முதலாக வெளிவரும் வரையிலான அந்த மருத்துவமனை சூழலை நாங்கள் விரும்பவில்லை..
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !
குறிப்பாக மருத்துவ மனையில் இருக்கும் காலக்கேடுக்கள் போன்றவற்றை நாங்கள் விரும்ப வில்லை..

எங்களது குழந்தை சொந்த விருப்ப படி பிறக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசையாக இருந்தது...!

சுதந்திரமான பிரசவம்

அது மட்டும் இல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் போது நமது வீட்டில் தான் இருக்கிறோம் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும். 
 
இதுவே மருத்துவமனை என்றால், மருத்துவ மனைக்குள் கால் எடுத்து வைக்கும் போதே ஒரு பய உணர்வு தொற்றிக் கொள்ளும்.. 
 
அது மட்டுமல்லாமல் நான் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் எனக்கு எந்த ஒரு மன அழுத்தமும், பயமும் பிரசவத்தின் போது உண்டாக வில்லை..

நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்.. எனக்கு என் வீடு மிகவும் சுதந்திரமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. 
 
அத்துடன் எங்களது வீட்டிலேயே பிரசவத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் இருந்தது. இதை விட சிறந்தது வேறு என்னவாக இருக்க முடியும்...!

வயிறு இறுக்கிப்பிடித்தது

எனக்கு அப்போது தான் பிரசவத்தின் 41-ஆவது வாரம்.. நாங்கள் வீட்டில் ஒரு நர்ஸை வேலைக்கு வைத்திருந்தோம்.. 
 
என்னை கவனித்துக் கொள்வதற்காக.. எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்தே வயிற்றில் இறுக்கிப் பிடிப்பது போன்ற ஒரு உணர்வு இருந்து கொண்டு தான் இருந்தது..

இதனால் நான் இரண்டு வாரங்களாக சரியாக தூக்க வில்லை.. ஆனால் எப்படியோ எனக்கு நடப்பதற்கும், நிற்பதற்குமான ஒரு சக்தி உடலில் இருந்து கொண்டு தான் இருந்தது.. 
 
என்னுடையை நர்ஸ் என்னை இரவு செக்கப் செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்..

தொடர்ந்த வலி

எனக்கு திடீரென்று அதிகமாக வலி எடுத்தது.. அப்போது இரவு 2 மணி இருக்கும்.. என்னால் வலியை தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை.. என்னால் எழுந்து நடக்க கூட முடிய வில்லை.. நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்..
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !
இந்த வலி மறுநாள் இரவு 11 மணிவரையில் இருந்தது.. நல்ல வேளையாக எனக்கு அடுத்த நாள் வலி ஒரளவிற்கு சரியாகி விட்டது..

எனது முயற்சிகள்

எனக்கு அப்போதும் கூட எங்களது குழந்தை வீட்டில் தான் பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்தது..! எனக்கு அது 42 வாரம்.. 
 
ஆனால் என் அம்மாவிற்கு 43 வது வாரத்தில் தான் குழந்தை பிறந்தது என்பதால் நான் நமக்கும் அதே போல தான் ஆகும் என்று நினைத்து விட்டேன்.என்னுடைய நர்ஸ் என்னை தொடந்து நன்றாக பார்த்துக் கொண்டு தான் இருந்தார். 
 
நான் எனக்கு பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக மேலும் கீழுமாக நடந்தேன்.. வீட்டில் சில பயற்சிகளை செய்தேன்.. மார்பக காம்புகளை தூண்டி விட்டேன்..

மருத்துவமனை

அப்போது தான் நாங்கள் முதல் முறையாக ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு சென்றோம்.. அங்கே மருத்துவர்கள் எனக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு, உங்களுக்கு பனிக்குடத்தில் தண்ணீர் குறைவாக இருக்கிறது..

இந்த தண்ணீர் தான் குழந்தையை பாதுகாக்கிறது என்பதால், நீங்கள் மருத்துவமனையில் உடனடியாக அட்மிட் ஆக வேண்டும் என்று கூறினார்கள்... 
 
ஆனால் நான் எனக்கு வீட்டில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.. என்று அவர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்..!

கசிவு

எனக்கு வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது, நீர் கசிவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.. அதனால் நான் மருத்துவ மனைக்கு மீண்டும் சென்று அட்மிட் ஆகிவிட்டேன்...
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !
அவர்கள் காத்திருந்து பார்த்துவிட்டு என் பனிக்குடத்தை ஒடைத்து விட்டனர்.. பனிக்குடம் உடைந்து பல மணிநேரங்களுக்கு பிறகும் எனக்கு குழந்தை பிறக்கவில்லை...

அந்த சமயம் குழந்தையின் இருத துடிப்பும் குறைவாக இருந்தது.. அதனால் மருத்துவர்கள், காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறி, சிசேரியன் செய்து கொள்ள கூறினார்கள்..

உணர்வுகள் இல்லையே...

என் குழந்தை வீட்டில் தான் பிறக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.. ஆனால் இப்போது வேறு வழி இல்லை.. என் குழந்தையின் உயிர் தான் எனக்கு முக்கியமானது.. 
 
எனவே மருத்துவர் களிடத்தில் சிசேரியனுக்கு சம்மதம் தெரிவித்தேன்.. சிசேரியனுக் கான ஏற்பாடுகள் நடந்தன.. எனக்கு அனஸ்தீஸ்யா கொடுக்கப் பட்டது.. எனது சிசேரியன் தொடங்கியது.. 
 
ஆனால் என்னால் பிரசவத்தின் வலியை உணர முடிய வில்லை.. எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை.. எனக்கு குழந்தை பிறந்தது..

மகிழ்ச்சியான நாள்

எனது குழந்தையின் தொப்புள் கொடியை எனது கணவரே கட் செய்தார்... கட் செய்யும் போது எனது கணவருக்கு கைகள் எல்லாம் நடுங்கின..
உஷாரய்யா உஷாரு.. வீட்டிலேல் குழந்தை பெற நினைத்தவர்கு மருத்துவரின் பதில் !
அவருடைய நடுக்கத்தை காணும் போது எங்களுக்கு சிலிர்ப்பாக இருந்தது.. மருத்துவர் மற்றும் நர்ஸ்களின் முகத்தில் புன்னகையை காண முடிந்தது.. 
 
எனது அதன் பின்னர் நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று கழுவி சுத்தம் செய்தார்.. எனக்கு என் குழந்தையை காணும் போது பிரசவத்தின் போது அனுபவித்த துன்பங்கள் எல்லாம் பறந்து போனது..!
Tags: