ரைம்ஸ் உருவானது எப்படி தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
வீட்டுக்கு வரும் உறவினர்கள் “ஒரு ரைம்ஸ் சொல்லு?” என்று கேட்பதும், சுட்டிகள் அதைப் பாடிக்காண் பிப்பதும்... 

சுட்டிகள் பாடுவதைப் பார்த்து உறவினர்கள் மகிழ வைக்கக் காரணமாக இருக்கும்

ரைம்ஸ் உருவான விதத்தையும் அதன் பொருளையும் தெரிந்து கொள்வோமா?

‘‘Rain rain go away, Come again another day”

இந்தப் பாடல், ராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சியில் உருவானது.

அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்து க்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் பகை ஏற்பட்டது. 
1588-ம் ஆண்டு, இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த 130 போர் கப்பல்களை ஸ்பெயின் அனுப்பியது.

34 சிறிய கப்பல் களையும் 163 வணிகக் கப்பல் களையும் கொண்ட ஆங்கிலேயக் கப்பல் படை, ஸ்பெயின் கப்பல் படையைத் தோற்கடித்தது.

தவிர, கடும் மழைச் சீற்றத்தால் இரண்டு கப்பல் படைகளும் சிதறடிக்க பட்டன.

அதனால், மழையிடம் ‘வரவேண்டாம்’ என்று கோரிக்கை வைப்பது போல இந்தப் பாடல் அமைந் திருந்தது.

முதன் முதலில் ‘Rain rain go to Spain’ என்றுதான் இந்தப் பாடல் எழுதப் பட்டது. பிறகு தான் ‘Rain rain go away’ ஆனது.

“Baa, Baa, Black sheep, Have you any wool?”

16-ம் நூற்றாண்டு வரை இந்தப் பாடலின் கடைசி வரி ‘None for the little boy, who lives down the lane’ என்று இருந்தது.

 1200-ம் ஆண்டுகளில் கம்பளிக்குப் பெரும் வணிகம் இருந்தது.

1272 -ம் ஆண்டு, இங்கிலாந்தை ஆண்ட எட்வர்ட் அரசர், கம்பளி வணிகத்து க்குக் கடும் வரியை விதித்தார். 

எனவே, வரிவிதிப்பின் அடுக்குகளை இந்தப் பாடல் விவரித்தது.

கம்பளி விற்றுக் கிடைக்கும் பொருளின் ஒருபகுதி அரசனுக்கும் மற்றொரு பகுதி தேவாலய த்துக்கும் சென்றது.
50 விமானம் மற்றும் 1,000 கார் பறக்கும் இஷா அம்பானி திருமணம் - ஜொலிக்கும் உதய்பூர் !
செம்மறி ஆடுகளை வளர்த்த மேய்ப்பனுக்கு ஒன்றுமே மிஞ்ச வில்லை என்கிறது பாடல்.

“Ringa Ringa Roses, A Pocket full of poses”

இந்த ரைம்ஸ் இரண்டு நூற்றாண்டு களுக்கு முன் உருவானது. 1665-ம் ஆண்டு லண்டனை பிளேக் நோய் ஆட்கொண் டிருந்தது.

இந்தப் பாடலின் முதல் வரியான ‘Ringa Ringa Roses’ என்பது பிளேக் நோயால் உடலில் ஏற்பட்ட சிவப்பு வட்டங் களைக் குறிக்கிறது.
பாய்ஸஸ் (Poses) என்னும் ஒரு வகையான தாவர இலைகள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என மக்கள் நம்பினார்கள்.

தங்கள் சட்டை பாக்கெட்டு களில் அவற்றை நிரப்பிக் கொண்டார்கள்.

பிளேக் நோயின் அறிகுறி களாகத் தும்மலும் இருமலும்

ஏற்பட்டது (Ashes). இறுதியில் எல்லோரும் இறந்து விட்டார்கள் (All fall down) என்கிறது பாடல்.

“London Bridge is falling down, Falling down, falling down”

தேம்ஸ் நதிக்குமேல் கட்டப்பட்ட லண்டன் பிரிட்ஜ், லண்டனின் பெருமைமிகு அடையாளம்.

அந்த பிரிட்ஜ் முதலில் கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டது. பல இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டது.

‘வைக்கிங்’ படையெடுப்பின்போது பாலம் எரிக்கப் பட்டது. 

அதனால், இந்தப் பாலத்தை எப்படிப் பாதுகாப்பது என்று ராணிக்கு ஆலோசனை வழங்குவ தாக இந்தப் பாடல் அமைந்தி ருக்கிறது.

‘பாலத்தைக் கல்லால் கட்டாதீர்கள்; இடிந்து விடும். இரும்பால் கட்டாதீர்கள்; வளைந்து விடும், தங்கத்தால் கட்டாதீர்கள்;

திருடி விடுவார்கள், காவலுக்கு ஆள் போடுங்கள், அவனைத் தூங்க விடாமல் இருக்க புகைக்கும் பைப்புகளைக் கொடுங்கள்’ என்கிறது பாடல்.

இந்தப் பாலத்தின் உறுதியை நிலைநாட்ட, நரபலிகள் கொடுக்கப் பட்டதாம்.

‘’Jack and Jill went up to the hill’

இந்தப் பாடலில் Jack எனக் குறிப்பிடப் படுபவர், 17-ம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்ட பதினான்காம் லூயிஸ்.

கையாடல் செய்த குற்றத்துக் காக லூயிஸ் கொல்லப் பட்டார்.

அவரைத் தொடர்ந்து மனைவி மேரி ஆண்டினாய்ட் என்பவரும் இறந்து போனார். 

அவரை Jill எனப் பாடல் குறிப்பிடு கிறது. ஆனால், இந்த நிகழ்வுக்கு முன்ன தாகவே இந்தப் பாடல் இயற்றப் பட்டது எனவும் கூறப் படுகிறது.

பாடல்கள் வழியாகத் தங்கள் வரலாற்றை அடுத்த தலை முறைக்குச் சொல்ல முயற்சி செய்திருக் கிறார்கள் ஆங்கிலே யர்கள்.

எனவே, நம் வரலாற்றைப் பாடும் நமது மொழிப் பாடல்களைப் பாடுவோம்.
Tags: