பற்பசையைக் கொண்டு வீட்டிலேயே கருத்தரிப்புப் பரிசோதனை செய்யலாம் என்று நீங்கள் என்றேனும் கற்பனை செய்ததுண்டா?
விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப் படவில்லை என்றாலும், உலகின் பல பாகங்களி லுமுள்ள
பெண்கள் இப்பரி சோதனையை வீட்டில் முயன்று பார்க்கின்றனர். என்ன! நீங்களும் முயன்று பார்க்கிறீர்களா?
உலகெங்கி லுமுள்ள பெண்கள் தாங்கள் கருத்தரித் திருப்போமோ என்ற சந்தேகம் எழும் போது ,
2௦16 ஆம் ஆண்டில் யூ-டியூப்-ல் வெளியான DIY கருத்தரிப்பு பரிசோதனையை செய்து பார்க்க ஆரம்பித்தனர்.
இச்செய்தி வலைத் தளங்களில் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.
பற்பசை கருத்தரிப்புச் சோதனை என்று பலராலும் அறியப்பட்ட இச்சோதனை யைப் பின்பற்றி
பல பெண்கள் தங்களது குளிய லறைக்குச் சென்று தாங்கள் கருத்தரித் திருக்கிறோமா என்று சோதனை மேற்கொள் கின்றனர்.
அவர்களு க்குத் தெரியும் இச்சோதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்று.
இருப்பினும் அவர்கள் இச்சோதனை யைச் செய்து பார்க்கவே விரும்பினர். இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இங்கே காண்போம்.
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு வெள்ளை நிற பற்பசையை எடுத்துக் கொள்ளவும்.
அதில் காலையில் வெளியேறும் சிறுநீரில் சில துளிகளைச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலக்கவும்.
மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து பார்க்கவும். அந்தப் பெண் கர்ப்ப முற்றிருந் தால் பற்பசை நுரைத்துக் கொண்டு நீலநிறமாக மாறி விடும்.
ஒரு மாற்றமும் இல்லை யெனில் பெண் கர்ப்ப முறவில்லை எனக் கொள்ளலாம்.
இந்த ஒரு விஷயம் திடீரென்று ஏன் இவ்வளவு முக்கியத் துவம் பெற்றது என்று
தற்போதைய போக்குப் பகுப்பு ஆய்வாளர் களால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இது போன்ற கருத்தரிப்பு பரிசோதனை களை எளிதில் எங்கும் சென்று செய்து கொள்ள முடியாத போதும்,
முக்கியமாக கிராமப் புறங்களில் வாழும் பெண்களும் சில பத்தாண்டு களுக்கு முன்பாகவே வீட்டிலிருந்த படியே
செய்து பார்த்து உறுதி செய்து கொள்வதாக சில வலைத் தளங்கள் தெரிவிக் கின்றன.
எனினும், அறிவியல் அறிஞர்களும், மருத்துவ நிபுணர்க ளும் பெண்கள் இந்த நடை முறையை
இந்த அளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்து கின்றனர்.
மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடிய, எளிதாக வீட்டில் செய்யக் கூடிய கருத்தரிப்புச் சோதனை களையே தேர்ந்தெடுக்கச் சொல்கின்றனர்.
இது 99% துல்லியமாக இருக்கும் என்று உறுதியளிக் கின்றனர். அல்லது உறுதியான இரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்து கின்றனர்.
சிறுநீரில் உள்ள அமிலம் பற்பசையில் உள்ள கால்சியம் கார்பொ னேட்டுடன் வினை புரிந்து கார்பன்-டை -ஆக்சைடை வெளி விடுகிறது.
இதனால் பற்பசை நுரைத்துக் காணப்படுவதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இதற்கும் கருத்தரிப் பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இருப்பினும், எந்த ஒருவரின் சிறு நீரையும் பற்பசை யுடன் கலக்கும் பொழுது நுரை உண்டாகும்.
ஆனால் கர்ப்பமுற்ற ஒரு பெண்ணின் சிறுநீருடன் பற்பசையைக் கலக்கும் பொழுது, சிறிதளவே நுரை உண்டாகும்.
ஏனெனில், கர்ப்பமுற்ற பெண்ணின் சிறுநீர் குறைந்த அளவு அமிலத் தன்மை கொண்டதாக இருக்கும் என்று வேறு சில மருத்து வர்கள் கூறுகின்றனர்.
வேறு சில பெண்கள் சர்க்கரை மற்றும் ப்ளீச் உடன் இந்த சோதனையைச் செய்து பார்க்கின்றனர்.
மற்றும் சிலர் வயதில் மூத்த இந்தியத் தாய் மார்களின் DIY கருத்தரிப்புச் சோதனைகளை முயன்று பார்க்கின்றனர்.
எளிதாகக் கிடைக்கக் கூடிய, வீட்டில் செய்து பார்க்கக் கூடிய கருத்தரிப்பு பரிசோதனை
உபகரணத்தை வாங்கி உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்து கிறோம்.
இப் பரிசோதனை யில் நீங்கள் கர்ப்ப முற்றிருப்பது உறுதி என்றால் இச்செய்தியை உலகிற்கு அறிவியுங்கள்!!