உங்கள் தலைமுடி வளராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்ன வென்று தெரிந்து கொண்டு, அதை சரி செய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க லாம். இன்றைய தலைமுறை யினர் இளமை யிலேயே முடியை இழந்து விடுகின்றனர்.
முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக் கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்ப தில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும். உங்களுக்கு முடி வளரா விட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன.
அவை என்ன வென்று தெரிந்து கொண்டு, அதை சரி செய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
அவை என்ன வென்று தெரிந்து கொண்டு, அதை சரி செய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
* மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கிய மற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக் களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
அது மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.
* உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற் கான காரணங் களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப் பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலை முடியின் வேர்களுக்கு அதிகப் படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்து வார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தி னால், அதனால் மயிர் கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமை யாக தடுக்கப்படும்.
அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லா விட்டால் சூரியக் கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலை முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
* தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக் குள்ளாகி,
முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்து கிறது
* தலை முடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்து வார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தி னால், அவை முடியின் ஆரோக்கி யத்தையும் வளர்ச்சியை யும் முழுமையாக தடுத்து விடும்.
* தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கி யமாக வளர வேண்டு மானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம்.
* தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கி யமாக வளர வேண்டு மானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம்.
எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரை யின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.