கர்ப்பம் பற்றிய விசித்திரமான அறிவியல் உண்மைகள் !

Fakrudeen Ali Ahamed
ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது மிகவும் மகத்தான விஷயம். குழந்தையை கருவில் சுமக்கும் போது தாயால் சில மாற்றங்களை உணர முடியும்.
ஆனால் கருவில் உள்ள குழந்தை என்னென்ன வேலைகளை எல்லாம் செய்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. 
உலகில் நடந்த சில விநோதமான கருவுறுதல்கள் மற்றும் பிரசவங்கள் பற்றி பலருக்கும் தெரியாத சில ஆச்சரிய மூட்டும் விஷயங்களை இந்த பகுதியில் காணலாம்.

1. நீண்ட கால கர்ப்பம்

பொதுவாக கர்ப்பம் என்பது நாற்பது வாரங்கள் அல்லது பத்து மாதங்கள் வரை இருக்கும். 
ஆனால் ஃபியூலாக் ஹண்டர் என்ற லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பெண் ஒரு வருடம் மற்றும் பத்து நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

2. ருசி பார்க்கும் குழந்தைகள்

தாய் சாப்பிடும் உணவின் ருசியை கருவில் வளரும் குழந்தைகளும் சுவைக்குமாம். 
அதிக சுவை கொண்ட பூண்டு போன்ற பொருட்களின் சுவையை குழந்தைகளும் சுவைக்குமாம். 

தாய் கர்ப்ப காலத்தில் நிறைய கேரட் ஜீஸ் குடித்தால், எதிர் காலத்தில் அது குழந்தைக்கும் ரொம்ப பிடித்து விடுமாம்.

3. இரட்டை குழந்தைகளின் நாடு
வளரும் நாடுகளில் மத்திய ஆப்பிரிக்கா வில் தான் அதிகப் படியான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம்.

4. வாய் வழி உடலுறவு
பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்த லெசோதோ நாட்டை ஒரு பெண் தனது வாய்வழி உறவால் கருவுற்றுள்ளார். 
இது வாய்வழி உடலுறவால் கூட கர்ப்பமடைய முடியும் என்பதற்கான சான்றாகும்.

5. சிறுநீரை குடிக்கும்!

கர்ப்பத்தின் இரண்டாவது பருவ காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே குழந்தை சிறுநீர் கழிக்க தொடங்கி விடும். 
தான் கழித்த சிறுநீரை குடித்து விட்டு மீண்டும் சிறுநீர் கழிக்கும். இதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும்.

6. பால் சுரத்தல்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டால் தானாகவே பால் சுரந்து விடும். 
அது தனது குழந்தையாக இல்லா விட்டாலும் கூட இவ்வாறு நிகழும்.
7. கருமுட்டைகள்
முயல், நாய், பன்றி, திமிங்கலம் மற்றும் மனிதனின் கரு முட்டையின் அளவு அனைத்தும் ஒன்று தான். 0.2 மிமீ அளவுக்கு தான் இருக்குமாம்.

8. பிறக்கும் போதே பல்
பிறக்கும் 2,000 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறக்கிறதாம்.

9. கருவில் அழும் குழந்தை

பொதுவாகவே குழந்தைகள் என்றால் அழுவார்கள். ஆனால் குழந்தைகள் கருவில் இருக்கும் போதே 
அழ தொடங்குகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், 4D ஸ்கேன்களில் கவனித்தாலே இது தெரியும்.

10. வளரும் கருப்பை
பெண்களின் கருப்பையானது, அவர்கள் குழந்தையை சுமக்கும் காலத்தில் 
பொதுவாக இருக்கும் அளவை காட்டிலும் 500 மடங்குகள் அதிகமாக வளருமாம்.

11. இதுவும் வளருமாம் :

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கருப்பை வளருவது கூட உங்களை ஆச்சரியப் படுத்தாமல் இருக்கலாம். 
ஆனால் கருப்பையுடன் சேர்ந்து பெண்களின் பாதங்களும், இதயமும் கூட இந்த சமயத்தில் வளருகிறதாம். 

12. கைரேகை 
கர்ப்பமாக இருக்கும் மூன்றாம் மாதத்திற் குள்ளேயே ஒரு குழந்தையின் கைரேகை முழுமையாக உருவாகி விடுகிறது. 

இந்த கைரேகை தான் இறப்பு வரை நீடித்திருக்கும்.
Tags: