`விட்டாச்சு லீவு' என்று குதூகல மாகக் கூவிக் கொண்டே, வீட்டை வலம் வரும் நாளுக் காகக் குழந்தைகள் காத்து கிடக்கின்றனர்.
அந்த மகிழ்ச்சி யான தருணமும் இன்னும் சில நாள்களில் வந்து விடும். சம்மர் லீவ் என்றால் குழந்தை களின் அட்ராசிட்டி யைத்
(அட்ராசிட்டி - இது பெரியவர் களின் வார்த்தை, குழந்தை களுக்கு அது கொண் டாட்டம்)
தாங்க முடியாது என்று பெற்றோர் அலுத்துக் கொள்வார்கள். ஆனால், குழந்தை களுடன் நேரம் செல வழிக்கவும்
படிப்பு தவிர்த்த சிலவற்றை அவர் களோடு உரையாடவும் கற்றுக் கொடுக்கவும் பொருத்த மான காலம் கோடை விடுமுறை நாள்கள் தாம்.
குழந்தை
களை நெறிப் படுத்துவது என்றவுடனே அறிவுரை களாக அள்ளி வழங்கி விட வேண்டும்
என்று யார் மனதிலாவது ஐடியா தோன்றி னால் உடனே அதை அழித்து விடவும்.
நம்மைச் சுற்றியுள்ள பல விஷயங் களைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோருமே தெரிந்து வைத்திருப்பது இல்லை.
அதனால், இந்த சம்மர் லீவில் குழந்தை களோடு சேர்ந்து கற்றுக் கொள்ளவும் முயற்சி செய்யலாம். அதற்கான சில யோசனை களே இவை.
நூலகம் உருவாக்கல்:
பள்ளி
நாள்களில் நூலகத் திற்குச் செல்லும் பழக்கம் கொண்ட குழந்தை களை, வீட்டுக்
குள்ளே சிறு நூலகம் அமைக்க வைக்க ஏற்பாடு செய்து தரலாம்.
அருகிலுள்ள
புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்று குழந்தை களுக்குப் பிடித்த நூல்களை
வாங்கிச் செய்யவும். பழைய புத்தகக் கடை என்றால் இன்னும் நல்லது.
ஏனெனில், குறைவான தொகையில் ஏராளமான புத்தகங்களை வாங்கிவிட முடியும்.
வீட்டின்
ஒரு பகுதியை ஒதுக்கி, முடிந்தால் அலமாரிகள் வாங்கித் தரவும் அல்லது சின்ன
மரப்பலகைத் துண்டு களைக் கொண்டு அலமாரி களை உருவாக்கக் கற்றுத் தரலாம்.
அதன் பின், புத்தகங் களைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அடுக்கச் செய்யவும்.
இது பள்ளி மற்றும் பொது நூலகத்தில் எவ்வாறு புத்தகங் களை அடுக்குகிறார் என்பதைக் குழந்தைகள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
டைரி எழுதுதல் :
டைரி
எழுதுவது என்பது நல்ல பழக்கம் என்று சொல்லிக் கொடுத்தி ருப்போம். ஆனால்,
எப்படி எழுதுவது, என்ன வெல்லாம் எழுதுவது என்று விரிவாகக் கூறி யிருக்க
மாட்டோம்.
இந்த விடுமுறை யில் புதிய டைரியை வாங்கித் தந்து, அன்றைய தேதியில் நடந்த வற்றை மட்டு மல்லாமல், நண்பர் களோடு ஏற்பட்ட சண்டை,
யார்
மீது தவறு, ஆசிரி யரிடம் கிடைத்த பாராட்டு, திட்டு உள்ளிட்ட வற்றை எழுதப்
பழக்கலாம். கூடவே, வீட்டைச் சுற்றி நிகழ்ந்து வரும் மாற்றங் களையும் எழுதச்
சொல்ல லாம்.
வாகனம் சுத்தம் செய்தல்:
வீட்டிலுள்ள
சைக்கிள் / பைக்கினை முறை யாகச் சுத்தம் செய்யப் பழக்க லாம். எந்தப்
பகுதி யில், எதனால் அதிகள வில் தூசு படியும் என்பதை இடை யிடையே சொல்லித்
தரலாம்.
முடிந்தால்,
வாகனங்கள் எவ்வாறு இயங்கு கின்றன என்பதை யூ டியூப் வீடியோக் களில்
பார்க்கச் செய்து, அந்தப் பாகங்களை வாகனம் சுத்தம் செய்யும் படி காட்டி
விளக்கலாம்.
பைக்கின்
பின் சக்கரத்தில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும், முன் சக்கரத் தில்
எவ்வளவு காற்று இருக்க வேண்டும் போன்ற விஷயங் களையும் கற்று த்தரலாம்.
சின்னச் சின்னத் தொழில் நுட்பங்கள்:
பல்பு எரிவதன் அடிப்படை என்ன... ஃபேன் சுற்றுவது எப்படி... சாவி எப்படிப் பூட்டின் லாக்கை விடுவிக் கிறது...
என்பது
போன்ற சின்னச் சின்னத் தொழில் நுட்பங் களை அதன் துறை சார்ந்து பணிபுரிபவ
ர்களிடம் அழைத்துச் சென்று கற்றுக் கொடுக்க வைக்கலாம்.
இப்படி
ஒரு நாளில் நாம் அதிகம் பயன் படுத்தும் விஷயங் களின் அடிப்படைப் பற்றித்
தெரிந்து கொண்டால், அந்த ஆர்வம் தொடர்ந்து பல விஷயங் களை நோக்கி உந்தித்
தள்ளும்.
கூட்டு ஓவியம்:
வீட்டின்
மையமான ஓரிடத்தில் பெரிய சார்ட்டை ஒட்டவும். அதில் தினமும் குறிப்பிட்ட
அளவு நேரம் ஒதுக்கி குடும்பத் தினர் அனைவரும் சேர்ந்து ஓவியம் வரை
யுங்கள்.
முதல் நாளில் மேகம் என நினைத்துத் தொடங்கிய ஓவியம், அடுத்த நாள் கட்டட மாக மாறும்.
அதற்கு அடுத்த நாள் மலை மீதுள்ள கட்டட மாக மாறும். இப்படி உருமாறும் ஓவியம் உங்கள் குழந்தைக்கு விரிவடைந்த கற்பனை ஆற்றலை வழங்கும்.
வில்லேஜ் ட்ரீ :
குழந்தைகள்
ஃபேமிலி ட்ரீ வரைந்து பார்த்திருப் பார்கள். அவர்களு க்கு வில்லேஜ் ட்ரீ
வரையக் கற்றுத் தரலாம். முதலில், உங்கள் வீட்டின் ஃபேமிலி ட்ரீயை வரைந்து
கொள்ளவும்.
மறு நாள், அதன் அருகேயே பக்கத்து வீட்டின் ஃபேமிலி ட்ரீயும், அதற்கு அடுத்த நாள் இந்தப் பக்கம் உள்ள
வீட்டினரின் ஃபேமிலி ட்ரீ என உங்கள் தெருவினர் மற்றும் ஊரிலுள்ள வர்களின் ஃபேமிலி ட்ரீயை வரையச் சொல்லலாம்.
இது சாத்தியமா என்று தோன்றலாம். ஆனால், இதைச் செய்யும் போது தான் வாழும் ஊரின் பெரும் பகுதியினர் பற்றிய
முழு விவரத்தை யும் உங்கள் குழந்தை கள் அறிந்து கொள்வர். இது அவர்களின் தொடர்பு கொள்ளும் திறனை வளர்த் தெடுக்கும்.
இவை
மட்டு மல்லாது, ஒரிகாமியில் உருவங்கள் செய்தல், சிறுவருக் கான சினிமாக்
களைப் பார்த்தல், கதைப் புத்தகங்கள் வாசித்தல், கதை எழுதுதல்,
புதிய
விளையாட்டு களைக் கற்றுக் கொள்தல் உள்ளிட்ட பலவற்றிலும் குழந்தை களை
ஈடுபடச் செய்வதன் மூலம் சோர் வில்லாமல் சம்மர் லீவைச் செலவழிப்பர்.