பூசணிக்காய் ஃபேஸ் பேக் !

Fakrudeen Ali Ahamed
தேவையான பொருட்கள்:
* பூசணிக் காய் கூழ் - 1/4 கப்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

* முட்டை - 1

* பாதாம் பால் - 1 டேபிள் ஸ்பூன்

* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் பூசணிக் காய் கூழ் எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இறுதி யில் நீரால் முகத்தைக் கழுவி, பின் மாய்ஸ் சுரைசரைப் பயன் படுத்த வேண்டும்.
Tags: