ஆண் என்றாலே பெண்ணின் உடலை ரசிப்பவன் என்ற எண்ணம் பெண்ணின் ஆழ்மனதில் வேறூன்றி யிருக்கும். உதாரணித்திற்கு ஒருவர் உங்கள் வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வருகிறார்.
அவர் என்ன வேலை செய்கிறார்? என்று கேட்கிறீர்கள். உடனே அவர் நான் பாகிஸ்தானில் 10 வருடம் வேலை செய்து விட்டு,
இப்பொழுது இந்தியாவில் ஒரு கம்பெனியில் வேலை செய்வதாக கூறினால், உடனே உங்கள் மனம் அவனை ஒரு தீவிரவாதியோ என்று எண்ணச் செய்யும்.
ஏன் என்றால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரம் என்று உங்கள் ஆழ்மனதில் சமூகம் ஒரு அபிப்பிராயத்தை திணித்து விட்டது. அவன் எவ்வளவு உத்தமனாக இருந்தாலும் உங்கள் மனம் அதை ஏற்காது.
அதைப் போலத் தான் ஆண் என்பவன் சபலப்புத்தி உடையவன் என்று பெண்கள் மனதில் ஆழமாக பதியப் பட்டுள்ளது. ஆதலால் ஒருவன் நல்லவனோ கெட்டவனோ பெண் தன்னை அறியாமல் உடையை சரி செய்வாள்.
ஆனால் ஆணிற்கு தன்னை தவறாக நினைக்கிறாள் என்ற குற்ற உணர்வு வந்து விடும். பெண் ஆணை பார்க்கும் பொழுது உடையை சரி செய்வது அவளின் மரபணுவிலே பதிந்து விட்டது. இதை அவளே நினைத்தாலும் மாற்ற முடியாது.
எனவே இதயத் துடிப்பை போல் ஒரு அனிச்சை செயலாக இது நடைபெறுகிறது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.