குழந்தை பிறந்தவுடன் தாயுடன் ஒட்டியிருக்கும் தொப்புள் கொடி என்ன ஆகும்?

Fakrudeen Ali Ahamed
0
UMBILICAL CORD என்று சொல்லக்கூடிய தொப்புள் கொடி என்பது உண்மையில் மூன்று இரத்த நாளங்களைக் கொண்டு உள்ள ஒரு கயிறு போன்ற உறுப்பாகும். 
குழந்தை பிறந்தவுடன் தாயுடன் ஒட்டியிருக்கும் தொப்புள் கொடி என்ன ஆகும்?
தொப்புள்கொடி யில் இரண்டு ஆர்ட்டரி மற்றும் ஒரு வெயின் என்று மூன்று ரத்த நாளங்கள் உள்ளது. 
 
இதன் மூலமாகவே சிசுவிற்கு உயிர் வாழ தேவையான இரத்த ஓட்டம் தாயின் உதிரத்தில் இருந்து குழந்தைக்கு வந்து சேர்கிறது.
 
ஒரு முனை தாயின் கர்பப்பையில் உள்ள நஞ்சுக் கொடியிலும் மற்றொரு முனை சிசுவின் வயிற்றிலும் சேர்ந்திருக்கும். 
பிரசவத்தின் போது சிசுவை வெளியே எடுக்கும் போது அந்த தொப்புள் கொடியை இரண்டு இன்ச் நீளம் விட்டு ஸ்டரைல் ப்ளேடால் அதை வெட்டி உடனே UMBILICAL CORD CLAMP என்ற சாதனம் கொண்டு இரத்தக் கசிவு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்..
 
தாயின் கர்ப்பபையில் உள்ள மறுமுனை பிரசவம் முடிந்த அரை மணி நேரத்தில் கர்பப்பை சுருங்குவதால் தானாகவே நஞ்சுக் கொடியுடன் சேர்ந்து கர்ப்ப்பை வாய் வெளியேறி விடுகிறது.
 
சிசேரியன் என்றால் மருத்துவர்கள் அகற்றுவார்கள். அப்படி ஒரு வேளை நஞ்சுக்கொடி வெளியேறாமல் இருந்தால் கர்ப்பப்பை சுருங்காமல் தாயிற்கு அதிகப்படியான இரத்தப் போக்கு ஏற்படும். 
தாயின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். 
 
அதனால் ஆக்ஸிடோஸின் மற்றும் ப்ராஸ்டடின் மற்றும் மெத்தர்ஜின் போன்ற மருந்துகள் மூலமாக கர்ப்ப்பையை சுருங்க வைத்து நஞ்சுக்கொடி யை முழுவதுமாக வெளியேற்றுவார்கள் மகப்பேறு மருத்துவர்..
 
இல்லை என்றால் உள்ளே இருக்கும் சின்ன சின்ன நஞ்சுக்கொடி திசுக்கள் கூட கர்ப்பபை யை சீழ்பிடிக்கச் செய்து பிரசவித்த தாயிற்கு ரண ஜன்னி கண்டு உயிரிழக்க நேரிடும். 
 
கிராமங்களில் இதனாலேயே வீட்டில் குழந்தை பிறக்கும் போது இது போன்ற இரத்த போக்கு மற்றும் ரணஜன்னி காரணம் தாய் சேய் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு.
அதனால் பிறந்த இரண்டு வாரங்களுக்கு தொப்புள் கொடி யை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பர் மருத்துவர்கள்.
தாய் பிரசவத்திற்கு பிறகு காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப் போக்கு உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்..
 
இவை யாவும் நஞ்சுக்கொடி சரியாக வெளியேறாததால் வரும் தொந்தரவாக இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)