உள்ளாடை பொருட்களில் காலாவதி தேதி என்ன? மீறினால் விளைவு !

Fakrudeen Ali Ahamed
ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு காலாவதி தேதி இருக்கின்றன. அவற்றின் காலாவதி தேதிக்கு மீறி நாம் பயன்படுத்தினால் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படும்.
உள்ளாடை பொருட்களில் காலாவதி தேதி என்ன?
நமது வீட்டில் வைத்துள்ள சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை, எல்லாவற்றிருக்கும் ஒரு காலாவதி காலம் உள்ளது. இதனை நம்மில் பலர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். 
உள்ளாடை முதல் ஷூ வரை எவ்வளவு நாள் காலாவதி காலம் என்பதை இவ்வளவு நாள் அறிந்திராமல் இருந்திருப்போம். இனி இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு..!
எதற்கும் ஒரு எல்லை உண்டு
நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலாவதி காலம் உள்ளது. அவற்றின் தன்மையை பொருத்தே ஒரு சில காலம் வரை நீடித்து இருக்கும். 

ஆனால், பல பொருட்களின் காலாவதி காலம் தெரியாமலே நீண்ட நாட்கள் பயன்படுத்துகின்றோம். இந்த செயல் பல வித பின் விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும்.

பிரஷ்
பிரஷ்
நாம் தினமும் காலையில் எழுந்ததும் பிரஷ் முன் தான் கண் விழிப்போம். இப்படி தினமும் பயன்படுத்தும் பிரஷ்ஷின் காலாவதி காலம் என்னென்னு தெரியுமா..? 
வெறும் 7 முதல் 10 மாதங்கள் மட்டுமே. இந்த காலத்திற்கு மேல் பயன்படுத்தினால் அவற்றின் தன்மை மாறி இருக்குமாம்.

ஷூஸ்
ஷூஸ்
அன்றாடம் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ நாம் பயன்படுத்தும் ஷூக்களின் காலாவதி காலம் எவ்வளவு என அறிந்தால் நீங்கள் பல ஆண்டுகளாக செய்து வரும் மிக பெரிய தவறு உங்களுக்கு புரிந்து விடும். 

ஷூக்களின் காலாவதி காலம் 1 ஆண்டு மட்டுமே..! அனால், நாம் ஒரே ஷூவை பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றோம். இது தவறான ஒன்றாகும்.

சீப்பு
சீப்பு
பல வருடமாக ஒரே சீப்பை பயன்படுத்தி வருகின்றீர்களா..? அப்போ உடனே மாற்றி விடுங்கள். சீப்பின் காலாவதி காலம் வெறும் 8 முதல் 10 மாதங்கள் மட்டுமே. 

ஏனெனில், சீப்பின் முற்களின் மென்மை தன்மை குறைந்து மழுங்கி விடும். இந்த சீப்பை பயன்படுத்தினால் முடி கொட்டுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும், சீப்பை வாரத்திற்கு 1 முறையாவது சுத்தம் செய்தல் வேண்டும்.

துண்டு
துண்டு
உடலை துவட்டும் துண்டை பல காலமாக வைத்து கொள்ளாதீர்கள். இவற்றை 1 முதல் 2 ஆண்டுகள் வரையில் பயன்படுத்துவது சிறந்தது. 
அதற்கு மீறி பயன்படுத்தினால் அவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்க கூடும். மேலும், இதனை பயன்படுத்திய பிறகு வெயிலில் உலர்த்த வேண்டும்.

தலையணை
தலையணை
நமக்கு நிம்மதியான உறக்கத்தை தரும் இந்த தலையணை களிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

ஏனெனில், இவை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் காலாவதி ஆகி விடுமாம். இதற்கு மீறி பயன்படுத்தினால் இவற்றில் கிருமிகள், தூசுகள், அதிகரித்து நமது உடலுக்கு பாதிப்பை தரும்.

மருந்துகள்
மருந்துகள்
நாம் கழிவறைக்கு பயன்படுத்தும் மருத்துங்களின் காலாவதி காலம் கூட மிக குறைவானதாகும். இவற்றின் வீரியம் வெறும் 3 மாதங்கள் வரை செயல்படும். 
இதற்கு மீறி பயன்படுத்தினால் அவை கழிவறைகளை சரியாக சுத்தம் செய்யாது.

ஹெல்மேட்ஸ்
ஹெல்மேட்ஸ்
நமது உயிரை காக்கும் இந்த கவசத்தை நீண்ட காலம் நாம் பயன்படுத்த கூடாது, இவற்றின் அதிகபட்ச காலம் 2 வருடம் மட்டுமே. 

எனவே, 2 வருடத்திற்கு ஒரு முறை இதனை மாற்றுவது அவசியம். மேலும், இவற்றில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் முன்பாகவே மாற்றுவது சிறந்தது.

கார் சீட்ஸ்
கார் சீட்ஸ்
இன்று அதிக பட்ச மக்களிடத்தில் இரு சக்கர வாகனம் அல்லது கார் இருக்கிறது. ஆனால், இவற்றில் பயன்படுத்தும் சீட்டை பல ஆண்டுகளாக மாற்றாமல் அப்படியே வைத்திருப்போம். 

இந்த சீட்களின் காலாவதி காலம் 6 முதல் 10 ஆண்டுகள் வரை தான். குறிப்பாக நீங்கள் இரண்டாம் பட்சத்தில் இவற்றை வாங்கினால், இந்த சீட்களை மாற்றுதல் சிறந்தது.

உள்ளாடைகள்
உள்ளாடைகள்
பொதுவாக நாம் பயன்படுத்துகின்ற ஆடைகளுக்கு காலாவதி காலம் இருக்கும். குறிப்பாக பெண்கள் அணிகின்ற உள்ளாடைகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை மட்டுமே காலாவதி காலம் உள்ளதாம். 
அதற்கு மீறி பயன்படுத்தினால் அவற்றின் தன்மை மாறி சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும், அரிப்பை ஏற்படுத்தவும் கூடும்.

சுவிட்ச் பாக்ஸ்
சுவிட்ச் பாக்ஸ்
நமது வீடுகளில் பல நூற்றாண்டாக ஒரே சுவிட்ச் பாக்ஸை பயன்படுத்தி வருகின்றோம். இது எத்தகைய பிரச்சினையை உங்களுக்கு ஏற்படுத்தும் தெரியுமா..? 

இவற்றின் திறன் குறைந்து மோசமான முறையில் விபத்துக்களை ஏற்படுத்தும். இந்த சுவிட்ச் பாக்சின் காலம் 1 முதல் 2 வருடங்கள் மட்டுமே. இதற்கு மேல் புதிய ஒன்றை மாற்றி விடுங்கள்.

மாவு
மாவு
சமையல் பொருட்களில் பலவற்றை நாம் நீண்ட ஆண்டு காலம் பயன்படுத்துவோம். ஆனால், இவை நமக்கு ஆபத்தை தரும். 
எந்த வகையான மாவாக இருந்தாலும் 6 முதல் 12 மாதம் வரை மட்டுமே தாக்கு பிடிக்கும். அதற்கு மீறி பயன்படுத்தினால் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

காலாவதி தேதி முக்கியம்..!
காலாவதி தேதி முக்கியம்
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவற்றின் காலாவதி தேதியை பார்த்தே வாங்க வேண்டும். மேலும், அந்த காலாவதி தேதி வந்து விட்டால் உடனே அவற்றை குப்பையில் போட்டு விடுங்கள். 
மீறி பயன்படுத்தினால் உங்களுக்கு தான் ஆபத்து என்பதை மாறவாதீர்கள். ஆண்டு கணக்கில் எந்தவித பொருட்களையும் பயன்படுத்துவது நல்லது அல்ல நண்பர்களே.
Tags: