தாடி வளர்க்க செலவே இல்லாமல் எண்ணெய் தயாரிக்க !

Fakrudeen Ali Ahamed
0
தாடி வளர்ப்பது இன்றைய இளைஞர்களின் டிரெண்டாகி விட்டது. ஆனாலும் சிலருக்கு என்ன தான் செய்தாலும் தாடி வளர்க்க சற்று சிரமப்பட வேண்டியுள்ளது. 
தாடி வளர்க்க
அவர்களை குறி வைத்தே சந்தை படுத்தப்பட்டது தான் பியர்ட் எண்ணெய். ஆனால் இதை வாங்கச் சென்றால் விலையோ குறைந்தது 300 ரூபாயாவது ஆகிறது. இது சிலருக்கு கட்டுப் படியாகாமலும் இருக்கலாம். 

அவர்களுக் காகவே இந்தக் கட்டுரை. செலவே இல்லாமல் வீட்டிலேயே எப்படி தாடி எண்ணெய் தயரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதல் குறிப்பு :

ஆலிவ் எண்ணெய் 6 ஸ்பூன், யூக்கலிப்டஸ் எண்ணெய் 3 சொட்டு, இரண்டையும் கலந்து நன்குக் குலுக்குங்கள். இந்த எண்ணெய்யை தாடையில் தேய்த்து 30 நிமிடங்கள் காத்திருங்கள். 
அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர தாடி விரைவில் வளரும்.
இரண்டம் குறிப்பு :

ஒரு முழு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் 10 சொட்டு ரோஸ்மெரி எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் தூங்கும்முன் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ தாடி நன்கு வளரும்.

மூன்றாம் குறிப்பு :
தாடி வளர்க்க எண்ணெய்
பாதாம் எண்ணெய்யுடன் யூக்கலிப்டஸ் மற்றும் டீ ட்ரீ எண்ணெய் ஆகிய இரண்டையும் இரண்டு சொட்டு கலந்து நன்குக் குலுக்குங்கள். 

தாடைகளில் தடவி 15 நிமிடங்கள் காத்திருந்து பின் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
நான்காம் குறிப்பு :

20 ml பாதாம் எண்ணெய்யுடன் 5 ml ஜோஜோபா எண்ணெய் கலக்குங்கள். அடுத்ததாக 2-3 சொட்டு ஆரஞ்சு எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் கலக்குங்கள். 

இதை தொடர்ந்து தாடை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்துவர தாடி நன்கு வளரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)