நீங்கள் லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா? அப்ப இதைப் படிங்க !

Fakrudeen Ali Ahamed
0
அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட லிப்ஸ்டிக், லிப்க்ளாஸ்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
நீங்கள் லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா?
அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் அதிர்ச்சியளிக்கும் இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை முகத்திற்கு பவுடர் மட்டுமே போட்டுப் பழகிய பெண்கள் இன்றைக்கு பலவித மேக்அப் சாதனங்களை உபயோகிக்கின்றனர். குறிப்பாக லிப்ஸ்டிக் இன்றி யாரும் வெளியே வருவது இல்லை.
பெண்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கில் உள்ள உலோகங்கள், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்த நிலையில் இப்போது அதிக அளவில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் லிப்ஸ்டிக்கில் இருப்பது தெரியவந்துள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளி இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

என்னென்ன உலோகங்கள்
என்னென்ன உலோகங்கள்
லிப்ஸ்டிக்கில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரோமியத்தை சாப்பிடுறாங்க
குரோமியத்தை சாப்பிடுறாங்க
சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் சுகாதாரமற்ற அளவிலான க்ரோமியத்தை தங்களது உடலில் உட்கொள்ளுகிறார்கள்.
வயிற்றில் கட்டி
வயிற்றில் கட்டி
இதனால் வயிற்றில் புற்றுநோய்கட்டி ஏற்படுவதற்கு இது காரணமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 

இதைவிட அதிகம் பயன்படுத்துவர்கள் பிற உலோகப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தரக்கட்டுப்பாடு இல்லை
தரக்கட்டுப்பாடு இல்லை
அமெரிக்காவில் இந்த மாதிரி அலங்காரப் பொருட்களில் உலோகங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி தரக்கட்டுப்பாடு ஏதும் இல்லை. 
எனவே லிப்ஸ் டிக் உபயோகிப்பவர்கள் குறைவாகப் பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பாவில் கட்டுப்பாடு
ஐரோப்பாவில் கட்டுப்பாடு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த விஷத்தன்மை வாய்ந்த உலோகப்பொருட்கள் அலங்காரப் பொருட்களில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)