நீருக்கடியில் பிரசவம் வலியின் வேதனை குறையும் !

Fakrudeen Ali Ahamed
0
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை, வேதனையும் வெறுப்பும், சலிப்பும், இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது. 
நீருக்கடியில் பிரசவம்

பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப் பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண். 

ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர். 
பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்கும் ஒரு முறைதான் நீரில் பிரசவம். 

பெண்ணுக்கு பிரசவவலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெது வெதுப்பான சுடு நீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மூதாதையர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின்றன.

1977 ல் டாக்டர் மைக்கேல் ஓடேன்ட் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பித்திவியரல் நகரில் உள்ள தமது மருத்துவ மனையில் செயற்கையான ரப்பர் குளியல் தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் பிரசவ வலி எடுத்த பெண்களை இறங்கச் செய்து பிரசவம் பார்த்தார். 
இதனால் பிரசவ வலியின் வேதனை குறைந்து விட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. இந்தத் தொட்டியில் தண்ணீரின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பராமரிக்கப் படுகின்றது. 

தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வர முடிகின்றது. மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. 
பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் இல்லை. இதுவரை 70 நாடுகளில் இந்த நீரியல் பிரசவ முறை பின்பற்றப் பட்டுள்ளது. அண்மையில் சீனா இதில் 71 வது நாடாகச் சேர்ந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)