பெற்றோர்கள் கவனத்திற்கு.. விடுமுறை நாட்களில் செய்ய வேண்டியது !

Fakrudeen Ali Ahamed
2 minute read
0
இந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தை களுக்காக செய்ய வேண்டியது இது தான், 


1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச் செல்லுங்கள்,

வங்கியில் உள்ள அனைத்து செல்லான் களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக் கொடுங்கள், 

A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசிய த்தையும் அக்கறை யுடன் சொல்லிக் கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங் களுக்கும், முதியோர் இல்லத்திற்கும்,

மனநல காப்பகத் திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப் பட்டார்கள்? 

என்பதை அருகிலிருந்து எடுத்துக் கூறுங்கள், அவர்கள் படும் துன்பங் களையும்,

ஏக்கங் களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள். 

 முக்கியமானது :

வலங்கைமான் பெரிய பள்ளிவாசலில் பள்ளி கோடை விடுமுறையை யொட்டி  

வருகின்ற 17-04-2016 ஞாயிற்று கிழமை முதல் 25-05-2016 வரை நடக்க இருக்கும் 

திருக்குரான் பயிற்சி வகுப்புகளி லும் கலந்து கொண்டு பயனடை யுங்கள் .  


மேலும் இதில் கலந்து கொள்ள வயது தகுதி எதுவும் இல்லை. அனைவரும் கலந்து கொள்ளலாம் . 

இதில் கலந்து கொண்டு பயன்பெறும் படி கேட்டு கொள்கிறோம். நன்றி.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்று களை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே

தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒரு முறையேனும் நீங்கள் இரத்த தானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், 

இரத்த தானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.

(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவ மனைக்கு அழைத்து சென்று,

அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டு வாருங்கள், 

விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்று வருபவரை காணச் செய்தாலே போதும்

அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டு மென்று முடிவெடுத்து கொள்வார்கள்.

7) ஒவ்வொருவ ருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று

நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப் படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், 

நம் முன்னோர் களின் "விவசாய" முறைகளை யும், வாழ்க்கையை யும், அவர்களின் பெருமை களையும், அதற்காக பட்ட கஷ்டங் களையும் கூறுங்கள்.


8) அது போல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவல கங்கள் போன்ற

இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களை யும் எடுத்துக் கூறுங்கள், 

அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர் காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள்,
எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று
அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டு மென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்து விடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து

அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், 

அவர்களுக் காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து,

அவர்களையும் செய்யச் சொல்லி அவர்களின் நண்பர் களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில் களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள்,

அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள்.


அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

இந்தப்பதிவில்‬ உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே

உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து கொள்வார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)