இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாக வுள்ளது.
தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்து க்கும், இதய கோளாறு களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப் பட்டது.
இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்கு வோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணி நேரம் மற்றும் 9 அல்லது
அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்கு வோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப் பட்டது.
எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணி நேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்து கின்றனர்.