சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

Fakrudeen Ali Ahamed
0
வெயில் தாக்குதல் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறுவ தால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால் அடிக்கடி தாகம் எடுக்கும். போதிய தண்ணீர் குடிக்காமை, சிறுநீர் கழியாமல் அடக்கி வைத்தல் போன்றவை காரணமாக சிறு நீர்ப்பையில் நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்குதல் ஏற்படலாம். இது பெரும்பாலும் பெண்களையும் சின்னப் பிள்ளை களையுமே தாக்குகிறது. 
சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம். 

இந்தப் பிரச்னையால் தாக்கப்பட்டவர் களுக்கு இளநீர், மோர், தண்ணீர், தண்ணீர் சத்து நிரம்பிய காய்கறிகள், பழங்கள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பதும் பருத்தி போன்ற மென்மையான ஆடை அணிவதும் இந்தப் பாதிப்பு வராமல் காப்பாற்றும். கோடையில் நிறைய தண்ணீர் குடித்தால் தான் சிறுநீரகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)