கோடை காலத்தில் பலர் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே நீண்டநேரம் இருப்பார்கள். அந்த அறைகளில் 24 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையே இருக்கும். இந்தத் தட்பவெப்ப மாற்றம் ஏற்று கொள்ளாமல் தான் சளி பிடிக்கிறது. சிலர், வெளியே சென்று விட்டு வியர்க்க விறுவிறுக்க ஏ.சி அறைக்குள் தஞ்ச மடைவார்கள்.
ஏ.சி-யை 18 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் வைத்திரு ப்பார்கள். தொண்டையில் குளிர்க் காற்று படுவதால் இவர்களுக்கும் சளி பிடிக்க வாய்ப் பிருக்கிறது.
குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குபவர் களுக்கு காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், குளிர்ந்த காற்று படுவதாலும் தொற்று எளிதாகப் பரவும்.
குளிர்ச்சியான குடிநீர் மற்றும் குளிர் பானங்களை அருந்துப வர்களுக்கும் சளி பிடிக்கும். கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பவர் களுக்கு, தொண்டையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குளிரூட்டப்பட்ட பேருந்து, ரயில், கார் போன்ற வற்றில் பயணிக்கும் போது யாருக்காவது சளி பிடித்தால் அருகிலிருப் பவர்களுக்கும் பரவக்கூடும்.
தீர்வுகள்!
* குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும்போது வெப்பநிலையை மிதமாக வைத்திருக்க வேண்டும்.
* தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறைந்தால், உடல் வெப்பநிலை மாற்றமடையும். அதனாலும் சளி பிடிக்கலாம்.