நீரை சேமிக்கும் சில வழிமுறைகள் !

Fakrudeen Ali Ahamed
0
கீழ்காணும் நீர் சார்ந்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவோம் நீரை ஒரு பொழுதும் சாக்கடையில் ஓட விடாதீர்கள். இந்த நீரை வேறு பயன்பாட்டிற்கு (செடிகளுக்கு, கழுவ) பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் நீர் கசிவு இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் பலவீடுகளில் நீர் கசிவுகள் மறைந்து காணப்படுகின்றன. கசியும் உபகரணங்களின் பழுதை நீக்கி விடுங்கள். 
நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்

ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசியுமானால் ஆண்டொன்றுக்கு சுமார் 10,200 லிட்டர்கள் நீர் வீணாகும். இதனால் நீருக்காக செலவிடும் தொகை அதிகரிக்கும், கழிவுநீர் தொட்டி விரைவில் நிரம்பி விடும். கழிவறை தொட்டியில் உணவில் பயன்படுத்தும் வண்ணப் பொடியை கலந்து தொட்டியில் கசிவு ஏதும் உள்ளதா என சோதனை செய்யுங்கள். 
தொட்டியில் கசிவு இருக்குமானால் 30 நிமிடத்தில் வண்ணநீர் வெளிவரும். சோதனை முடிந்தவுடன் கழிவறை தொட்டியை அலசி விட்டு விடுங்கள் இல்லை யெனில் அதில் கறை படிந்து விடும். கழிவறையில் உடைந்த, நெளிந்த (அ) தேய்ந்த பாகங்கள் இருந்தால் அதனை உடனே நீக்கி விடுங்கள். பெரும்பாலான நீக்க வேண்டிய பாகங்கள் மலிவானவையும், எளிதில் கிடைக்கக் கூடிய வையாகும். 

எளிதில் மாற்ற தக்க வைகளாகும். தேவைக்கு அதிகமாக கழிவு கிண்ணத்தை அலசி விடாதீர்கள். திசு பேப்பர்கள், பூச்சிகள் மற்றும் இதர கழிவுகளை கழிவு கிண்ணத்தில் போடுவதை தவிர்த்து குப்பை தொட்டியில் போடுங்கள். குறுகிய கால குளியல் செய்யுங்கள். நவீன குறைந்த நீர் பாயும் குளியல் தெளிப்பானை பயன்படுத்துங்கள். குளிப்பதற்கு குறைந்த அளவு நீரையே பயன்படுத்துங்கள். 

முகச்சவரம் செய்யும் போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்தே வைத்திருந்து தண்ணீரை வீணே ஓட விடாதீர்கள். சுடுநீருக்காக காத்திருக்கும் பொழுதே முகச்சவரம் செய்து விடுங்கள். பின் குவளையில் நீர் நிரப்பி முகம் கழுவுங்கள். தானியங்கி துணி துவைக்கும் மற்றும் பாத்திரங்கள் கழுவும் எந்திரங்களை அவை களுடைய முழு கொள்ளளவு அடைந்தால் (அ) அவைகளின் கொள்ளளவுக்கு உகந்த நீர் மட்டத்தை அடைந்தால் மட்டுமே துவக்கி வைக்க வேண்டும். 

குளிரூட்டும் பெட்டியில் தேவையான குடிநீரை ஒரே தடவையில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் தேவைப்படும் பொழுதெல்லாம் குழாயை திறக்காதீர்கள். குழாய் நீரை பாய்ச்சி இறைச்சி (அ) உறைந்த உணவின் உறைவை நீக்காதீர்கள். 
இரவு முழுவதும் குளிரூட்டும் பெட்டியை நிறுத்தி வைத்து (அ) நுண்அலை அடுப்பு மூலம் உணவின் உறைவை நீக்கவும். மேலும், ஒவ்வொருவரும் தங்களது முகநூல் (அ) கூகுல் + (அ) வாட்ஸப் ஆகிய வற்றில் நீர் சேமிப்பு மற்றும் நீர் சிக்கனம் பற்றிய வாசகங்களை பகிர்ந்து மற்றவர் களையும் நீரை சேமிக்க ஊக்கு விக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)