உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
ஆனால் அந்தரங்க பகுதியில் வளரும் முடியைக் குறித்த சில உண்மைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
உண்மை #1
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பாலியல் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என்று பல நிபுணர்களும் கூறுவதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் சீன ஆய்வு ஒன்றில், ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் உள்ள பாபிலோமா வைரஸ், பெண்களுக்கு எளிதில் நோய்த் தொற்றுக் களை உண்டாக்கும் என தெரிய வந்துள்ளது.
எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
உண்மை #2
தலையில் இருப்பது போன்ற பேன், அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அந்தரங்க பகுதியில் பேன் எதுவும் வராமல் இருக்க வேண்டு மானால், அவ்வப்போது அப்பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும்.
உண்மை #3
பலரும் அந்தரங்க பகுதியின் சுத்தம் என்று வரும் போது, அப்பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்து நீக்கினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் எந்த ஒரு பாலியல் மருத்துவ ஆய்விலும் அம்மாதிரியான நன்மை ஏதும் நிரூபிக்கப்பட வில்லை.
உண்மை #4
உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை சுத்தம் செய்யும் போது மிகுந்த ஆபத்தை சந்திப்பார்கள். ஆய்வு ஒன்றிலும், உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள் அந்தரங்க பகுதியை ஷேவ் செய்யும் போது மற்றவர்களை விட இருமடங்கு அதிகமாக சிராய்ப்பைப் பெறுவதாக தெரிய வந்துள்ளது.
உண்மை #5
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும், அது குறிப்பிட்ட அளவு தான் வளரும். ஒருவேளை, அப்பகுதியில் வளரும் முடியின் வளர்ச்சி அதிகம் இருந்தால், ஷேவ் செய்யாமல் இருப்போரின் கெதியை நினைத்துப் பாருங்கள்.
உண்மை #6
அந்தங்க பகுதியில் வளரும் முடியும் வெள்ளையாகும். ஆனால் உடலிலேயே மிகவும் தாமதமாக வெள்ளையாகும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும் முடி தான்.