ஆண்களால் பால் கொடுக்க முடியுமா? மார்பகங்களை பற்றி உண்மைகள் !

Fakrudeen Ali Ahamed
0
ஆணும் பெண்ணும் சமம் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சில உடல் சார்ந்த மாற்றங்கள் மட்டுமே ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி காட்டுகிறது. மற்றபடி பிறப்பால் இருவரும் சமம் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது பிறப்புறுப்புகள், மார்பகங்கள் மற்றும் ஒரு சில உடல் அமைப்புகள் மட்டுமே வேறுபாடு அடைந்திருக்கும். 
ஆண்களால் பால் கொடுக்க முடியுமா?

பெண்களின் மார்பக பகுதிகள் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் நோய்கள் பற்றி இப்போதெல்லாம் ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் ஆண்களின் மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்புகள் ஆகிய வற்றை பற்றி எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் ஆண்கள் இருக்கிறார்கள். 
ஒரு ஆண் கட்டாயம் தனது உடல் பாகங்களை பற்றி விழிப்புணர்வு கொள்ளல் வேண்டும். குறிப்பாக இன்று பல ஆண்களை குறி வைக்கும் மார்பகம் சார்ந்த பல்வேறு நோய்களின் தாக்கத்தை ஆண்கள் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். இந்த பதிவில் ஆண்களின் மார்பகத்தை பற்றி அறியப்படாத 9 உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம்.

1. ஆண்களின் மார்பகங்கள் பெண்களின் மார்பகங்கள் போல பெரிதாகுமா..?

அ. ஆம், ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

ஆண்களின் மார்பகங்கள் பெண்களின் மார்பகங்களை போன்று பெரிதாகும். இது ஆண்களின் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்வதே. 
ஆண்களின் மார்பகம் பெண்களின் மார்பகம் போல பெரிதாகுமா?
இதனை கைநெகோமஸ்டியா (Gynecomastia) என்று அழைப்பார்கள். பொதுவாகவே பெரும்பாலான ஆண்களுக்கு இந்த பிரச்சினை இருக்க கூடும்.

2. ஆண்களின் மார்பகங்களில் பால் சுரக்குமா ..?

அ. ஆம், ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

பெண் - ஆண் என இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வகையான தசைகள்தான் அவர்களின் மார்பக பகுதிகளில் இருக்கும். பெண்களை போன்றே ஆண்களுக்கும் மார்பகங்களில் பால் சுரக்கும். 
ஆண்களின் மார்பகங்களில் பால் சுரக்குமா?

ஆனால் இது ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே சுரக்க செய்யும். சில சமயங்களில் அவர்களது மார்பக காம்புகளில் இருந்து பால் வடியவும் செய்யும். அவ்வாறு இருந்தால் அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
3. ஆண்களால் தங்களது குழந்தைகளுக்கு பால் ஊட்ட முடியுமா..?

அ. ஆம், ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

இது மிகவும் வியப்பான கேள்வியே. ஆண்களால் எவ்வாறு பால் ஊட்ட முடியும் என்று பலர் குழம்பி இருப்பீர்கள். இதற்கான உண்மை காரணம் இதுதான். ஆண்களாலும் தங்களது குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும். ஆனால் இது பெரும்பாலான ஆண்களுக்கு சாத்தியம் ஆகாது. 
ஆண்களால் குழந்தைகளுக்கு பால் ஊட்ட முடியுமா?
ஏனென்றால் அவர்களது உடலில் ப்ரோலக்ட்டின் (prolactin) ஹார்மோன் மிகவும் கம்மியாக சுரக்கும். குறிப்பிட்ட சில ஆண்களுக்கு மட்டுமே ப்ரோலக்ட்டின் அதிகமாக சுரக்கும். எனவே அவர்களால் பால் கொடுக்க முடியும்.

4. ஆண் பால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா..?

அ. ஆம், ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

எப்படி தாய்ப்பால் குழந்தை களுக்கு ஆரோக்கிய மானதா அதே போன்று தான் ஆண்பாலும் குழந்தை களுக்கு ஆரோக்கிய மானது. ஆண்களுக்கு ஆக்சிடாக்சின் மற்றும் ப்ரோலக்ட்டின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கத்தான் செய்கிறது. 
ஆண் பால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
பெண்களின் பாலில் எந்த அளவு ஊட்ட சத்துக்கள் இருக்கிறதோ அதே அளவு தான் ஆண் பாலிலும் இருக்கிறது. ஆனால் இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்க கூடிய ஆண்களால் மட்டுமே இது சாத்தியம்.

5. மார்பக காம்புகளில் ரத்தம் அல்லது பால் போன்று வடிந்தால் அதற்கு காரணம் என்ன..?

அ. மார்பக தொற்று நோய், ஆ. மார்பக புற்று நோய், இ. பருவமடைதல்

விடை :- மார்பக புற்று நோய்
விளக்கம் :-

நோய்களில் சற்றே ஆபத்தானது இந்த புற்று நோய். அதுவும் மார்பக பகுதிகளில் வந்தால் மிகவும் கடினம் தான். பெண்களு க்கு எப்படி மார்பக புற்று நோய் வருகிறதோ அதே போன்று தான் ஆண்களு க்கும் இந்த மார்பக புற்று நோய் வரும். 
மார்பக காம்புகளில் ரத்தம் அல்லது பால் போன்று வடிந்தால் காரணம் என்ன?

மார்பக காம்புகளில் வலியோ, பால் போன்று ஏதேனும் வடிந்தாலோ அல்லது வீக்கம் ஏற்பட்டாலோ அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறி என்பதை உணருங்கள்.

6. ஆண்களின் மார்பக காம்புகளை தொடும் போது ஆர்கசன் அடைவார்களா..?

அ. ஆம், ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

ஆண்களுக்கும் பெண்களை போன்றே பல உணர்வுகள் ஒன்றாகத் தான் இருக்கும். பெண்கள் தங்களது மார்பக காம்புகளை தொடும் போது எந்த அளவு ஆர்கசம் அடைகி றார்களோ... 
ஆண்களின் மார்காம்புகளை தொடும் போது ஆர்கசன் அடைவார்களா?
அதே அளவிற்கு ஆண்களும் ஆர்கசம் அடைகி றார்கள். இந்த ஆர்கசம் அடைவது இயல்புதான் என்கிறது ஆராய்ச்சிகள்.

7. ஆண்களின் மார்பகங்கள் எப்போது பெரிதாகும்..?

அ. சிறு வயது முதலே, ஆ. நோய் தொற்றுகள் இருந்தால், இ. பருவம் அடையும் காலத்தில்

விடை :- பருவம் அடையும் காலத்தில்

விளக்கம் ;-
ஆண்களின் மார்பகங்கள் எப்போது பெரிதாகும்?
எல்லா ஆண்களுக்கும் மார்பகங்கள் பெரியதாகாது. அதிகப் படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே இது நடக்க கூடும். இந்த மாற்றங்கள் குறிப்பாக ஆண்கள் பருவம் அடையும் காலத்தின் போது சுரக்கும் ஹார்மோன் களால் தான்.
8. மார்பகம் என்பது?

அ. ஒரு உறுப்பு, ஆ. தசை, இ. தொங்குதசை

விடை :- ஒரு உறுப்பு

விளக்கம் :-
மார்பகம் என்பது?

பொதுவாக உறுப்புகள் என்றாலே அதற்கென்று தனி செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறு இருப்பதையே உறுப்பு என்பார்கள். மார்பகங்களும் பாலை சுறப்பதால் இதனை உறுப்பு என்கிறோம்.

9. பெண்களின் மார்பகங்கள் போன்று ஆண்களின் மார்பகங் களிலும் ஒரே அளவு பால் சுரக்குமா..?
அ. ஆம், . இல்லை

விடை :- இல்லை

விளக்கம் :- 
பெண்களின் மார்பகம் போன்று ஆண்களின் மார்பகங்களில்பால் சுரக்குமா?
பெண்களுக்கு மார்பாகங்களில் இயற்கை யாகவே அதிகம் பால் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி கிடையாது. பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் ப்ரோலேக்ட்டின் அதிகம் சுரக்கிறது. இது தான் அவர்களின் அதிக படியான பால் சுரப்பதற்கு காரணம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)