கறுப்பு மற்றும் குண்டான பெண்கள் - வேறுபாடு?

Fakrudeen Ali Ahamed
0
தனது அளவிற்கான உடையை விற்பனையாளரிடம் கேட்கும் பருமனான பெண்ணுக்கு ஜிம்முக்கு செல்லும் அறிவுரை மட்டுமே இலவசமாக கிடைக்கும்.
கறுப்பு மற்றும் குண்டான பெண்கள் - வேறுபாடு?
முகத்தை வெண்மையாக்கும் அழகு சாதன கிரீமை பயன் படுத்துவதை பெரிதாக பேசிய காலம் மாறி, இப்போதோ உடலின் பிற பாகங்களை வெண்மை யாக்கும் அழகு சாதனப் பொருட்களும் சந்தையில் வந்து விட்டதே!

சுவைமிக்க சுறா மீன் பொரியல் செய்வது எப்படி?

உடல் பருமன் காரண மாக பலரின் கேலிக்கும், கிண்டலு க்கும் ஆளாவதாக 24 வயது ஆகாங்ஷா சொல்கிறார் 'நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு இப்போதும் நினை விருக்கிறது, 
 
வகுப்பறைக்கு வெளியே நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற எனது ஆசிரியை, நான் குண்டாக இருப்பதற்கான காரணம் தெரிந்து விட்டதாக கூறிச் சிரித்தார். 

என்னைச் சுற்றி நின்றிருந்த சக மாணவர்கள் அனை வரும் கொல்லென்று சிரித்ததும், மிகவும் அவமானமாக உணர்ந்தேன். நான் அதீத உணவு பழக்கத்தினால் மோசமாக பாதிக்கப் பட்டிருந்தேன். 
 
ஆகாங்ஷா மேலும் சொல்கிறார், குழுவாக புகைப்படம் எடுக்கும் போது, வரிசையின் கடைசியில் நிற்கச் சொன்னார் பள்ளியின் தலைமை ஆசிரியை. 
 
நான் குண்டாக இருப்பதால், குழுவின் நடுவில் இருந்தால் நன்றாக இருக்கா தாம்''! ஆனால் இப்போது இதைப் போன்ற கேலி, குத்தல் பேச்சுகளுக்கு நான் கவலைப் படுவ தில்லை. என்னுடைய ஆரோக் கியம் தான் எனக்கு முக்கியம்.
உடல் வாகை கேலி செய்வது உடல்வாகு அல்லது நிறத்தை வைத்து கேலி செய்வது இன்று இணைய தளத்திலும் வாடிக்கையான வேடிக்கை யாகி விட்டது. 

பெண்களின் புகைப் படங்களை வைத்து கேலிக்காக உருவாக் கப்படும் மீம்ஸ்களில், 'அழகற்றவர்கள்' என குறிப்பிட பயன்படுத்தப்படுவது 'கறுப்பு', 'பருமன்',
 
பெண்களைத் தான். பிறகு அதை டேக் செய்து நண்பர்களுக்கு அனுப்பி, திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கேலி செய்வார்கள்.

கொழுப்பைக் கரைக்க கூடிய வெண்டைகாய் !

பிறகு தொடங்குகிறது உடல் வாகை வைத்து கேலி செய்யும் வேடிக்கை விளையாட்டு. ஆனால் இது உண்மையில் சரியான மனப்போக்கா? பருமனான அல்லது கறுப்பு நிற பொம்மை யுடன் நீங்கள் விளையாட விரும்பு வீர்களா? 
 
அந்தத் தோற்ற த்தில் இருக்கும் எத்தனை விளம்பர பொம்மை களைப் பார்த்தி ருப்பீர்கள்? 'ஈட்டிங் டிஸாடர்' என்ற பத்திரிகை அதீத உணவு பழக்கம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மை யில் வெளியிட் டுள்ளது. 
பொதுவாக கடைகளில் வைக்கப் பட்டிரு க்கும் விளம்பர பொம்மை உருவ த்தை ஒத்து மக்களின் தோற்றம் இருந்தால், அவர்கள் மருத்துவ ரீதியில் ஆரோக்கிய மற்றவர் களாக கருதப் படுவார்கள். 
 
அது மட்டுமல்ல, விளம்பர பொம்மைகள் போன்ற உடல் வாகுடன் இருப்பதாக நினைப்பதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதே.
 
உண்மையில் ஒரு பெண், விளம்பர பொம்மைப் போன்ற ஒல்லி யான உடல் அளவை கொண்டிருந்தால், அப்பெண்ணுக்கு மாதவிடாய் வருவதற் கான வாய்ப்பே இருக்காது. 
 
அதே போல் விளம்பரத்தில் பயன் படுத்தபடும் ஆண் பொம்மைகளை போன்ற உடல் வாகு கொண்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு இருக்கும். 
 
பிரிட்டனில் இரண்டு நகரங்களில், காட்சிப் படுத்தப் பட்டிருந்த விளம்பர பொம்மை களை ஆராய்ந்த ஆய்வாளர்களின் முடிவு இது. 
அளவுக்கு அதிக பருமனாக இருப்பது நோய்க்கான அறிகுறி என்றால், மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தால் ஆரோக்கியமானதா என்ன? இல்லவே இல்லை.

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாள் குறையுமாம் !

மிகவும் ஒல்லியான தோற்றம் என்பது, மனநல சிக்கல்கள் மற்றும் அசாதாரண உணவு பழக்கங்கள் உருவாகுவதற்கு 
 
முக்கியமான காரணம் என்பதை விளக்கும் ஆதாரங்கள் இருப்பதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் எரிக் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார். 

இளம் வயதினர் அதிலும் குறிப்பாக பதின்ம வயதினர் தான், உடல் வாகை வைத்து கேலி செய்வதால் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் என்று 
 
கூறும் மனநல மருத்துவர் நீது ராணா, உடல் வாகை கேலி செய்வதால் மன உறுதி குலைந்து போகிறது. 
கறுப்பு மற்றும் குண்டான பெண்கள் - வேறுபாடு?
அது கேலியும் கிண்டலும் உடல் வாகுடன் நின்று விடாமல், பேசும் முறைகளை கொண்டும் தொடர்கிறது. 
 
ஒரு வித குறிப்பிட்ட விதமான உடல் வாகை பெற வேண்டும் என்ற அழுத்தம் பல நாட்டுப் பெண்க ளிடையே இருக்கிறது. 
 
இதனால், எனுரேசிஸ் (enuresis) எனப்படும் சிறுநீர் தானாக கழியும் நோய்க்கும் பெண்கள் ஆளா கின்றனர்.
 
மனவெழுச்சிக் குழப்பம் இல்லையே? அனொரெக்ஸியா (Anorexia) என்பது, உடல் எடையை குறைப் பதற்காக சில கடுமை யான நடவடிக்கை களை எடுப்பதாகும், 
 
சிலர் உணவை சாப்பிடாமலேயே இருப்பார்கள், இது மரணத் திலும் முடியலாம்.
திரைப் படங்களிலும், தொலை காட்சி நாடகங்களிலும், பருமனாக இருப்பவர் களை முட்டாளாக காட்டுகி ன்றார்கள். 
சிறுவர்க ளுக்கான கார்ட்டூனும் இதற்கு விதி விலக்கு இல்லை.'டோரிமான்' இன் ஜியானோ அல்லது 'கித்ரேத்ஸு' வில் வரும் வயதான கொரில் லாவாக இருக் கட்டும். 
 
இந்த இரண்டு கதா பாத்திரங்களுமே பருமனான வையாகவும், மந்தபுத்தி கொண்டவை களாகவும் காட்டப் பட்டுள்ளன. 

சரும வறட்சியை போக்கும் வெண்ணெய் மசாஜ் !

நகைச் சுவைக்காக பருமனாகவும், கறுப்பாகவும் காட்டும் திரைப் படங்களையும், நகைச்சுவை நாடகங்களும் பொது வாகவே அனை வராலும் ரசிக்கப் படுகிறது.

இதன் பின்னணி யில் பல விதமான கேள்வி களும், சமூக போதனை களும் இருக்கிறது. இங்கே நாம் எழுப்பும் முக்கிய மான கேள்வி இது தான்… 
இயல்பான மனிதர்களின் உருவங்களில் விளம்பர பொம்மைகளை பார்ப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? நமது குழந்தைகள் விளையாட கறுப்பான, குண்டான பொம்மைகளை வாங்குவோமா?
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)