துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?

Fakrudeen Ali Ahamed
0
இந்த உலகில் ஒருவரு க்கு ஏற்படும் கொடுமை யில் ஒன்று என்றால் அது மிகவும் விருப்ப மான துணி களில் கறைகள் படிவது தான். 
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?

அதிலும் அவற்றை எப்படி தான் துவைத் தாலும், அவை போகாமல், அந்த துணி யின் அழகைக் கெடுப்பது என்றால் அது அதை விட மிகக் கொடுமை யான விஷயம். சொல்லப் போனால் அந்த கறைகள் நம்மால் தான் படிகிறது. அப்படி படியும் கறை களில் ஒருசில கறை களை எளிதில் நீக்கி விடலாம். 

ஆனால் காப்பி, ஒயின், க்ரீஸ் போன்ற கறைகள் படிந்தால், அந்த துணியே வேஸ்ட் என்று தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால், அத்தகைய கறை களையும் எளிதில் நீக்க லாம். இப்போது அந்த கறை களை எப்படி எளிதில் நீக்குவது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளு ங்கள்… 

காப்பி / டீ கறைகள்: 

காப்பி குடிக்கும் போது துணி களில் அவை பட்டு விட்டால், உடனே வீட்டில் இருக்கும் டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை, கறை படிந்த இடத் தில் விட்டு,
காப்பி டீ கறைகள்
5 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நன்கு தேய்த்து, வெது வெதுப் பான நீரில் அலசி னால் கறைகள் போய் விடும். 

இரத்தக் கறைகள்: 

இரத்தக் கறைகள் என்றதும் கொலை செய்யும் போது மட்டும் தான் ஏற்படும் என்று நினைக்க வேண்டா. இந்த வகை யான கறைகள் பெண் களுக்கு மாத விடாயின் போது அதிகம் ஏற்படும் வாய்ப் புள்ளது.
இரத்தக் கறைகள்

ஆகவே இந்த நேரத்தில் ஏற்படும் கறைகள் சில துணி களில் போகாமல் இருக்கும். இதற்கு காரணம் கறை படியும் போது உடனே குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். தாமத மானால் தான் அந்த கறைகள் போகாமல் இருக் கிறது. ஏனெனில் அப்போது இரத்தம் உறைந்து, அந்த இடத்தில் தங்கி விடுகிறது. 

பேனா மை கறைகள்: 

பெரும் பாலும் இந்த மாதிரி யான கறைகள் பள்ளி செல்லும் குழந்தை களுக்கு தான் ஏற்படும். இந்த கறை களை நீக்க சிறந்த ஒரு மேஜிக் என்ன தெரியுமா?
பேனா மை கறைகள்
அது தான் ஹேர் ஸ்ப்ரே. அதிலும் இந்த ஸ்ப்ரேவை கறை போகும் வரை தெளித்து நன்கு தேய்த்து, பின் வெது வெதுப் பான நீரில் கழுவி னால் போய் விடும். 

சாக்லேட் கறைகள்: 

சாக்லேட் பிரி யர்கள் இந்த உலகில் மிகவும் அதிகம். அதே சமயம், அந்த கறை களை ஏற் படுத்துப வர்களும் அதிகம். ஏனெனில் சிலர் ரசித்து ருசித்து சாப்பிடு கிறேன் என்று உருகும் வரை சாப்பிடு வார்கள், பின் அது துணி களில் ஒட்டும்.
சாக்லேட் கறைகள்
முதலில் சாக்லேட்டை எப்போது சாப்பிடும் போதும் ப்ரிட்ஜில் வைத்து சற்று கெட்டி யாக்கி பின்னரே சாப்பிட வேண்டும். அதிலும் உருகி விட்டால், ஒரு ஸ்பூனால் எடுத்து சாப்பிட வேண்டும். 

சரி அந்த கறைகள் படிந்து விட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரை அந்த கறை யின் மீது தெளித்து, தேய்க் காமல் சற்று நேரம் விட்டு விட வேண்டும். இதனால் அந்த கறைகள் அந்த ரிமூவரை உறிஞ்சி விடும். பிறகு அதனை துவைத் தால், அது போய் விடும். 

ஒயின் கறைகள்: 

ஒயின் கறைகள் துணி களிலோ அல்லது டேபிள் கவரிலோ படிந்து விட்டால், அதன் மேல் வட்ட வடிவ மான ஒரு ஒளி வட்டம் போல் தோன்றும்.
ஒயின் கறைகள்

ஆகவே அதனை நீக்க பேக்கிங் சோடாவை வைத்து துவைத் தால், கறைகள் நீக்கி பளிச் சென்று ஆகி விடும். 

க்ரீஸ் கறைகள்: 

சைக்கிள், பைக், கார் போன்ற வற்றால் துணி களில் க்ரீஸ் கறைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு க்ரீஸ் படிந்து விட்டால், துணி வீணாகி விட்டது என்று பயப்பட வேண் டாம். அப்போது அந்த கறையை போக்க, கார்ன் ஸ்டார்ச்
க்ரீஸ் கறைகள்
அல்லது பேக்கிங் சோடாவை அந்த இடத் தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் டிடர் ஜெண்ட் மூலம் நன்கு துவைத் தால் கண்டிப் பாக போய் விடும். 

மேலும்

மேற் கூறிய வற்றை நினை வில் கொண்டு, உங்களின் விருப்ப மான துணி களில் படிந்து இருக்கும் கறை களை நீக்கி, சந்தோஷ மாக மீண்டும் அந்த துணியை அணியுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)