செக்ஸ் உணர்வை அதிகரிக்கவும், செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் உள்ளன, ஆனால் இந்த மருந்து எல்லாம் கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்பட்டதும் பக்க விளைவுகளும் நிறைந்தது.
ஆனால் இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த
ஒரு பொருள் பக்கவிளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை அதிகரித்துள்ளது, ஆம் அந்த பொருள் வெந்தயம் தான்.
இரும்பு சத்து மற்றும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த வாழை இலை !
வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆய்வா ளர்கள் கூறியுள்ளனர். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை இது தூண்ட வெந்தயம் உதவுகிறது.
வெந்தயம், இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை நிறைய உணவுப் பொருட்களில் இந்திய மக்கள் பயன் படுத்துகின்றனர்.
இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் உணர்வை தூண்டி செக்ஸ் வாழ்க்கையை சுறு சுறுப்பாக வைத்திருக்கும் சக்தி உள்ளதாம்.
வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம்.
இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர்.
கொலஸ்ட்ராளை குறைக்கும் ஆலிவ் எண்ணெய் !
அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்தனர்.
இந்த ஆய்வுக் காலத்தில் அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன.
ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதி லிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.
வெந்தயம் சாப்பிடாமல் வேறு ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்த போது அவர் களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாகவே இருந்தது தெரிய வந்தது.
வைட்டமின் இ சத்து உள்ள பாதாம் !
வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி உடையது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
படுக்கை அறையில் இனி முழுமையான செக்ஸ் உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, கிச்சனில் உள்ள வெந்தயத்தின் மீது கண் வையுங்கள்.