உடலுறவு என்பது இரு தனி நபர்களை உடலளவில் மட்டும் இணைக்கும் விஷயம் அல்ல., உடலை தாண்டி மனதையும் இணைக்கும் விஷயம்...
மனிதர்களை பொருத்த மட்டில் உடலுறவு என்பது இன்பம் பயக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அது இரு உள்ளங்களை இணைக்கும் விஷயம் என்பது உன்மை.
பல்வேறு ஆய்வுகளின் முடிவின் படி ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 8000 முறை (அ) 7 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு பற்றி நினைக்கின்றார் என கூறப்படுகிறது. அதே வேளையில் பெண் ஒருத்தி 18 நிமிடங்களுக்கு ஒரு முறை உடல் உறவு பற்றி நினைத்து பார்கின்றால் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
மனித உணர்வுகளை மையப் படுத்திய இந்த விஷயத்திற்கு எண்களால் கட்டுப்பாடு விதிப்பது என்பது இயலாத காரியம். சொல்லப் போனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் உடல் உறவு பற்றி நினைத்து பார்க்கத் தான் செய்கின்றனர்.
சரி போகட்டும்., இந்த உடலுறவு கொள்வதால் மனித உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?. ஸ்பேனிஸ் ஆய்வாளர்களின் ஆய்வின் படி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கே காண்போம்..
நோய் எதிர்ப்பு சக்தி
குறிப்பிட்ட கால இடைவெளி யில் உடலுறவு வைத்துக் கொள்ளுதல் மூலம் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதய நோய் குறையும்
ஒரு மனிதர் இயல்பான உடலுறவு (வாரம் இரண்டு முறை) உடலுறவு வைத்துக் கொண்டால் இதய நோய்களுக் கான அறிகுறிகள் குறையும்.
ரத்த அழுத்தம்
உடலுறவிற்கும் ரத்த அழுத்தத்திற்கு ஒரு தொடர்பு உண்டு., முறையான உடலுறவு சீரான ரத்த அழுத்தத்தினை பராமரிக்கும் என கூறப்படுகிறது.
நிவாரணம்
தலைவலி, உடல்வலி போன்ற சிறிய வலிகளுக்கும் உடலுறவு ஒரு சிறு நிவாரணம் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
உடற் பயிற்சியாகும் உடலுறவு
முறையான உடல் உறவு உடற்பயிற்ச்சி சமானம் என கூறப்படுகிறது. உடலின் ரத்த அழுத்தம், கலோரிஸ், சதைகளை பலப்படுத்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் உடலுறவு என்பது ஒரு உடற் பயிற்சியாகவே கருதப்படுகிறது.
நினைவாற்றல்
உடலுறவு கொள்வதால் அங்கத்தில் ஏற்படும் அமைதி மூலைக்கான சீரான ஓய்வினை அளிக்கின்றது, எனவே நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
புற்றுநோய் தடுப்பு
தொடர்ச்சியான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாது என கூறப்படுகிறது.
ஆழ்ந்த தூக்கம்
உடலுறவின் உச்சத்தை அடைந்த நிலையில் ஏற்படும் பரிமாற்றம், ஆழ்ந்த உறக்கத்திற்கு வித்திடும்.