முத்தம் எதற்காக ஆண்களுக்கு பிடிக்கிறது !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் உதடுகளில் ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது ஆய்வு. ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவ தான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டு பிடித்திருக் கிறார்கள். பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிசேகம் செய்யும் போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. 
முத்தம் பிடிக்கும் ஆண்கள்

ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமை யானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சி தானாம் இது. இது குறித்து ரட்கர்சு(ஸ்) பல்கலைக் கழகத்தின் ஆய்வாளரான கெ(ஹெ)லன் பிசர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். 

அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் கூட்டாளருடன் (With partner) அனுப்பி விடும் உத்திதான் அது.
முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போது தான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த ஈர முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் கெலன். அமெரிக்காவின் பென்சில்வேனியா வின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி கில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லா வற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள். 

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது கூட்டாளருடன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல் களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிசர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 15, April 2025